For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியான சேமியா உப்புமா

By Maha
|

காலையில் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிட வேண்டுமானால், அதற்கு உப்புமா தான் சிறந்தது. ஏனெனில் உப்புமாவில் காய்கறிகளை சேர்த்து செய்வதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் உடல் ஆரோக்கியமாக செயல்படும். அதிலும் உப்புமாவில் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் உப்புமா பேச்சுலர்கள் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. இங்கு அந்த சேமியா உப்புமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Easy Semiya Upma Recipe For Breakfast

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 8-10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சேமியா உப்புமா ரெடி!!!

English summary

Easy Semiya Upma Recipe For Breakfast

Check out the recipe for semiya upma and give it a try. Semiya upma is prepared in more or less the same way as a regular upma. 
Story first published: Friday, April 25, 2014, 19:16 [IST]
Desktop Bottom Promotion