Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1 -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
வாழைக்காய் வெச்சு ஒருவாட்டி இப்படி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பே தோத்துப் போயிடும்...
Vazhakkai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? வாழைக்காய் வாங்குனா எப்பவும் வறுவல், பொரியல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் வாழைக்காய் கொண்டு ஒருமுறை குழம்பு செய்யுங்கள். இப்படி வாழைக்காய் குழம்பு செய்தால், மீன் குழம்பே தோத்துப்போயிடும். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.
வாய்க்கு ருசியாக குழம்பு செய்து சாப்பிட நினைப்பவர்கள் இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். நல்ல சூடான சாதத்துடன் வாழைக்காய் குழம்பை ஊற்றி, அப்பளத்தை சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால், சும்மா அள்ளும். வேண்டுமானால் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு வாழைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 2
குழம்பிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு (நீரில் ஊற வைத்த சாறு எடுத்துக்
கொள்ளவும்)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சற்று பெரிய
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் மிளகாய் தூள்,
மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து
நன்கு ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், வேண்டுமானால் சிறிது எண்ணெய்
ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து, சிறிது நேரம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள
வெங்காய தக்காளி விழுதை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பை திறந்து, அதில்
புளிச்சாறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து
கிளறி, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறி, 5
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வாழைக்காய் குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











