Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
சப்பாத்திக்கு இப்படி காளான் மசாலா செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Mushroom Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்தியை செய்யும் போதெல்லாம், அதற்கான சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது பெரிய வேலையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காளான் பிடிக்குமா? அப்படியானால் அந்த காளானை வாங்கி, ஒரு மசாலாவை அரைத்து ருசியான காளான் மசாலாவை செய்யுங்கள்.
இந்த காளான் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இந்த சுவையில் காளான் மசாலாவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் 2 சப்பாத்தியை அதிகமாக சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி இந்த காளான் மசாலாவையும் செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு காளான் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4-5 பல்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 6
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரக தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காளான் - 300 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் முந்திரியை சேர்த்து,
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள்
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கிளறி,
சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து, தக்காளியை நன்கு வேக வைத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை
ஜாரில் ஊற்றி அலசி சேர்த்து கிளறி, மூடி வைத்து, நன்கு எண்ணெய் பிரிய
வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி
கிளறி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான காளான் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











