1 கப் கோதுமை ரவையும், 2 தக்காளியும் வெச்சு.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க..

Posted By:

Thakkali Gothumai Rava Dosa Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரியான சுவையில் டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் காலை டிபனை சாப்பிட நினைக்கிறீர்களா? அதே சமயம் சத்தான டிபனை சாப்பிட விரும்புகிறீர்களா?

வீட்டில் கோதுமை ரவையும், தக்காளியும் இருந்தால், அவற்றைக் கொண்டு தோசை சுடுங்கள். இந்த தோசை புதுமையான சுவையில் இருப்பதோடு, சத்தானதும் கூட. இந்த தோசைக்கு வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி போன்றவை சிறந்த சைடு டிஷ்களாக இருக்கும்.

Tomato Wheat Rava Dosa How To Make a Thakkali Gothumai Rava Dosa

உங்களுக்கு தக்காளி கோதுமை ரவை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கோதுமை ரவை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை ரவை - 1 கப்
* வெள்ளை அவல் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 2
* தக்காளி - 2
* கொத்தமல்லி - சிறிது (அரைப்பதற்கு)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 8
* இட்லி மாவு - 2 கரண்டி
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் 1 கப் கோதுமை ரவையை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் மற்றொரு கிண்ணத்தில் அவலை எடுத்து, அதிலும் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, மிக்சர் ஜாரில் சோம்பு, சீரம், பூண்டு, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த கோதுமை ரவை, அவல் மற்றும் நறுக்கிய தக்காளி, சிறிது கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, அத்துடன் சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சிறிது கொத்தமல்லி, துருவிய முந்திரி, 2 கரண்டி இட்லி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தக்காளி கோதுமை ரவா தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 11, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion