For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழ பான் கேக்

By Maha
|

பான் கேக் பார்ப்பதற்கு சப்பாத்தி போன்று, ஆனால் சற்று தடிமனாக இருக்கும். இத்தகைய பான் கேக்கில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வாழைப்பழ பான் கேக். இதனை காலை உணவாக கூட செய்து சாப்பிடலாம். இதனால் உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

அதுமட்டுமின்றி, இது மாலை வேளையில் சாப்பிடவும் ஏற்ற உணவாகும். குறிப்பாக இந்த ரெசிபியை டயட் மேற்கொள்வோர் காலையில் செய்து சாப்பிடுவது சிறந்தது. இப்போது அந்த வாழைப்பழ பான் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Banana Pancake

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 11/2 கப்
முட்டை - 1
வாழைப்பழம் - 3 (மசித்தது)
ப்ளூபெர்ரி - அலங்கரிப்பதற்கு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, அரிசி மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதன் நடுவே கையால் ஓட்டை போட்டு, அதில் பால், வெண்ணெய், முட்டை ஆகியவற்றைப் போட்டு நன்கு பிசைய வேண்டும்.

பின்பு அதில் வாழைப்பழத்தை போட்டு, நன்கு மென்மையாகவும், சற்று கெட்டியாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.

கல்லானது சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போன்று சற்று கெட்டியாக தேய்த்து போட்டு, வெண்ணெயை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான வாழைப்பழ பான் கேக் ரெடி!!! இதன் மேல் ப்ளூபெர்ரி மற்றும் சிறிது வாழைப்பழத் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறினால் அருமையாக இருக்கும்.

English summary

Banana Pancake

Banana pancakes are delicious breakfast recipe that can be prepared easily. Take a look.
Story first published: Tuesday, August 20, 2013, 10:49 [IST]
Desktop Bottom Promotion