சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்! வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நீங்கள் எதிர்பார்த்த மழைக் காலம் வந்து விட்டது. கொஞ்சம் யோசித்து பாருங்க கொட்டும் மழையில் ஜில்லென்ற காற்றில் கையில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்தால் எப்படி இருக்கும். என்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கீங்களா. கவலையே வேண்டாம் நீங்கள் வீட்டிலேயே ருசியான கலர்புல்லான ரைஸ் கட்லட் செய்து கொடுத்து எல்லாரையும் அசத்திடலாம்.

இந்த ரைஸ் கட்லட் உங்கள் நாவிற்கு ருசியான ஸ்நாக்ஸ் என்பதால் கண்டிப்பாக உங்கள் மழைக்காலத்தை இதுவரை நீங்கள் கண்டிராத புது அனுபவமாக மாற்றி விடும். இதுவரை ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் எளிதாக ரைஸ் கட்லட் செய்து விட முடியும்.

கண்டிப்பாக இந்த ஸ்நாக்ஸ் உங்கள் வீட்டு குழந்தைகளையும் ருசிபார்க்க வைத்து விடும். மற்ற சிப்ஸ் போன்றவற்றை விட இது மிகவும் ஆரோக்கியமானது. இதனுடன் சட்னி சேர்த்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.

என்னங்க இப்பவே சாப்பிடனும் போல தோனுதா சரி சரி வாங்க இந்த ரைஸ் கட்லட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பரிமாறும் எண்ணிக்கை :10 கட்லட்

தயாரிக்கும் நேரம் :15 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் :10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

சமைக்கப்பட்ட சாதம் - 1கப்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1(தோலுரித்து மசித்து கொள்ளவும்)

காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) - 1கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)

இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1/4 "டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

உப்பு - தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் - கொஞ்சம்

சீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)

Tasty Rice Cutlet Snack Recipe

செய்முறை :

1. ஒரு பெளலை எடுத்து எண்ணெய்யை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.

2. கையை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.

3. இப்பொழுது டேஸ்ட் பார்த்துக் கொண்டு உப்பு, காரம் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

4. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

5. ஒரு தட்டில் சிறிது மாவை தூவி விட வேண்டும்.

6. இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையை கொண்டு டிக்கிஸ் தயாரிக்க வேண்டும். அதாவது கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக கட்லட் வடிவத்தில் தட்ட வேண்டும். இது தான் டிக்கிஸ். இந்த டிக்கிஸை மாவு தூவப்பட்ட தட்டில் வைத்து கொள்ளவும்.

7. வாணலியை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

8. எண்ணெய் மிதமாக சூடானதும் டிக்கிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.

9. டிக்கிஸ் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

Tasty Rice Cutlet Snack Recipe

10. பொன்னிறமாக வரும் வரை திருப்பிக்கிட்டே இருக்க வேண்டும்.

11. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிய டிஸ்யூ பேப்பர் விரித்து கொள்ளுங்கள்

12. இப்பொழுது அந்த தட்டில் பொரித்த கட்லட்டை வைக்கவும்.

13. சுவையான ரைஸ் கட்லட் ரெடி

இந்த கட்லட்டுடன் சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

தட்டில் மாவை தூவி அதன் மேல் கட்லட்டை வைப்பது முக்கியம். இது கட்லட் தட்டில் ஒட்டாமல் இருக்க உதவுகிறது

பேசன் மாவிற்கு பதில் நீங்கள் வறுத்த பொரி கடலை மாவை கூட பயன்படுத்தினாலும் கட்லட் நன்றாக வரும்.

Tasty Rice Cutlet Snack Recipe

இன்னும் சுவையாக மணமாக கட்லட் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தியும் செய்யலாம்

என்னங்க ரெடியாகி விட்டீங்களா உங்க வீட்லயும் கட்லட் செய்து அசத்துவதற்கு.

English summary

Tasty Rice Cutlet Snack Recipe

Tasty Rice Cutlet Snack Recipe
Story first published: Friday, June 30, 2017, 10:58 [IST]
Subscribe Newsletter