காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி? ருசியான ரெசிபி!!

By: Bala Karthik
Subscribe to Boldsky

அதனால், நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்ட சத்துக்கள், சரியான முறையில் நம் உடலை சென்று சேர வேண்டியது அவசியமாகிறது. நம் உடலுக்கு தேவையான, போதுமான அளவு கார்போஹைட்ரேட், நமக்கு ஆற்றலை தர வல்லதாகும். அதுமட்டுமல்லாமல், நம் உடம்புக்கு புரத சத்தும், வைட்டமின்களும், கனிமங்களும், மற்ற பல ஊட்ட சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கவேண்டியதும் முக்கியமாகும்.

இந்த காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடையை கண் இமைக்கும் நேரத்தில் நாம் தயாரிக்க, இதற்கு எந்த வகையான கலவை மற்றும் ஊற வைக்கும் முறைகளும் தேவைப்படுவதில்லை. இதனை ஒரு சிற்றுண்டியாக நாம் பரிமாற, இதனை சுவைப்போர் நாவில் 'இன்னும் வேண்டும்' என்ற ஆசையையும் இது தூண்டுகிறது. அதனால், இந்த காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வதனை பற்றி இந்த ஆர்டிக்கலின் மூலம் தெரிந்துகொண்டு செய்து பார்த்து நாம் மகிழலாமே.

பரிமாற தேவையானவர்கள் - 4 நபர்

சமைப்பதற்கு தேவையான நேரம் - 30 நிமிடங்கள்

தயாரிப்பதற்கு தேவையான நேரம் - 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

ரொட்டி (Bread) - 3 (துண்டுகளாக்கப்பட்டது) 

கேரட் - ½ கப் (நறுக்கப்பட்டது)

உருளைகிழங்கு - ½ கப் (வேகவைக்கப்பட்டது, பிசையப்பட்டது)

வெங்காயம் - 1 கப் (நன்றாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 டீ ஸ்பூன் (நறுக்கியது)

புதினா இலைகள் - கை அளவு (நறுக்கியது)

கொத்துமல்லி தழை - கை அளவு (நறுக்கியது)

கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

சீரகத் தூள் - ½ டீ ஸ்பூன்

அரிசி மாவு - 2 டீ ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

Mixed Vegetable Bread Vada

செய்முறை:

1.ஒரு பெரிய (கலப்பதற்கு ஏதுவான) பௌலை எடுத்துகொள்ளுங்கள். ரொட்டியை துண்டு துண்டுகளாக எடுத்துகொண்டு, அதனை பௌலில் போட்டுகொள்ளுங்கள்.

2.அத்துடன் நறுக்கப்பட்ட கேரட், பிசையப்பட்ட உருளைகிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துகொள்ளுங்கள்.

3.உங்கள் கைகளை கொண்டு நன்றாக பௌலில் இருப்பனவற்றை பிசைந்து (கலந்து) கொள்ளுங்கள்.

4.இப்பொழுது, மசாலாவை சேர்த்து கொள்ளுங்கள். ஆம், கரம் மசாலா தூள் மற்றும் சீரக தூளை சேர்த்து கொள்ளுங்கள்.

5.உப்பு, ருசிக்கேற்ப மற்றும் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்.

Mixed Vegetable Bread Vada

6.இந்த பௌலில் இருப்பதனை, ஓரிரு நிமிடங்களுக்கு நன்றாக கிண்டிகொள்ளுங்கள். அதேபோல், ரொட்டி கலவையில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கவேண்டியது அவசியமாகும். அதனால், பிசைய வேண்டியதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை, உங்களுடைய காய்கறி, போதுமான ஈரப்பதத்துடன் காணப்படுமெனில், தண்ணீரை அதிகம் சேர்த்துவிடாமல் கவனமாக நாம் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்...தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பின்னர், அந்த கலவையை நன்றாக பிசைந்து தேவைக்கேற்ப நீரினை சேர்த்து கொள்ளுங்கள்.

Mixed Vegetable Bread Vada

7.அதன்பின்னர், அதே பௌலில் அரிசி மாவை சேர்த்துகொள்ள வேண்டும். மிருதுவான நிலையை, பௌலில் இருக்கும் கலவை அடையும் வரை, நன்றாக பிசைய வேண்டியது அவசியமாகும்.

8.அந்த மாவை...8 லிருந்து 9 பிரிவுகளாக பிரித்துகொள்ள வேண்டும். அதனை பந்து போன்ற வடிவத்தில் உருட்டி, உங்களுடைய பசைமிக்க (பிசுபிசுவென்னும்) கைகளால் அதனை வடை போன்று தட்டையாக தட்ட வேண்டும்.

9.வடைகள் அனைத்தும் தட்டை வடிவத்தில் இருக்க வேண்டியதில் கவனம் கொள்ள வேண்டும். இல்லையென்றால்...அது சரியாக உள்ளே, வேகுவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது.

Mixed Vegetable Bread Vada

10.ஒரு ஆழமான வறுப்பதற்கு ஏதுவான கடாயை எடுத்துகொள்ளுங்கள். அதில் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்.

11.எண்ணெய்யானது சூடாக இருக்குமெனில், அடுப்பை குறைத்து வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வடையாக கடாயில் போட வேண்டும். அதேபோல், வறுக்கும் கடாயில் போடப்படும் வடையினை கொண்டு ஒருபோதும் கடாயை நிரப்பிவிட கூடாது. இடைவேளி (Space) என்பது வேண்டும். அப்பொழுதுதான் காய்கறி வடையின் தன்மையானது நமக்கு மொறுமொறுவென கிடைக்கும். ஆம், ஒரு நேரத்தில் 2 அல்லது 3 வடையை மட்டும் கடாயில் பொறிக்க வேண்டியது அவசியமாகும். கடாயின் அளவை பொறுத்தே நாம் வடையை அதில் போட வேண்டும்.

12.அந்த வடையை சில நிமிடங்கள் பொறித்து, திருப்பி போட (TURN OVER) வேண்டும். அப்பொழுது தான் வடையானது முழுவதுமாக பொறியும்.

13.அதேபோல், வடையை திருப்பி போட்ட பின்னர், கருகாமல் பார்த்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

14.அதாவது, அந்த வடையின் நிறமானது தங்க பழுப்பு நிறத்தை அடையும் வரை பொறிக்க வேண்டும்.

15.அவ்வாறு தங்க பழுப்பு நிறத்தை அடையும்பொழுது, கிட்சன் துணியை கொண்டு...இருக்கும் மீதி எண்ணெய்யை வடிகட்டி, வடையை மட்டும் எடுக்க வேண்டும்.

Mixed Vegetable Bread Vada

16.அந்த வடை, இப்பொழுது மிகவும் மொறுமொறுவென டேஸ்டியாக இருக்கும்.

இந்த மொறுமொறுவென இருக்கும் காய்கறிகள் கலந்த வடையை பரிமாறி, சுடசுட தட்டில் வைத்து... பூண்டு தக்காளி சட்னி, பச்சை புதினா அல்லது மிளகாய் சட்னியுடனோ அல்லது தக்காளி கெட்ச்அப்புடனோ சேர்த்து சாப்பிட, 'இன்னும் வேண்டும்' என்னும் ஆர்வத்தை அது உங்கள் மனதில் தூண்டுகிறது.

English summary

Mixed Vegetable Bread Vada

Mixed Vegetable Bread Vada
Story first published: Friday, June 16, 2017, 13:00 [IST]
Subscribe Newsletter