Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1 -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
சரவணபவன் வெஜ் குருமா ரெசிபி... சப்பாத்தி, பூரிக்கு இத ஒரு தடவை செய்யுங்க... ஹோட்டல் சுவையிலேயே இருக்கும்...!
Saravana Bhavan Veg Kurma Recipe in Tamil: வீட்டில் என்னதான் விதவிதமாக சமையல் செய்து சாப்பிட்டாலும் கடைகளில் சாப்பிடும் உணவுதான் நம் நாக்குக்கு சுவையாக தெரியும். சிலருக்கு அவற்றை வீட்டில் முயற்சி செய்து பார்க்கும் ஆர்வமும் இருக்கும். ஆனால் அதன் சுவை சரியாக வருவதில்லை என்கிற வருத்தமும் இருக்கும். அந்த ஹோட்டல் ஸ்டைல் சைடிஷை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், ஹோட்டல்களில் கொடுப்பதும் போன்ற சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் சரவண பவன் ஸ்டைல் வெஜிடபிள் குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சரவண பவன் ஸ்டைல் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கேரட்
- 6 பீன்ஸ்
- 1 உருளைக்கிழங்கு
- காலிஃளார்
- பச்சைப்பட்டாணி
- 1 பெரியவெங்காயம்
- 1 தக்காளி
- 1 பிரியாணி இலை
- 1 கல்பாசி
- 3 கொத்து புதினா
- 3 கொத்து மல்லி இலைகள்
- 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
- 1 டீஸ்பூன் தயிர்
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 3 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1 ஏலக்காய்
- 1/2 ஸ்பூன் கசகசா
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூ கரம் மசாலா தூள்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 4 முந்திரி
செய்முறை:
- முதலில் சுத்தமான நீரில் காய்கறிகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
- வெங்காயம் மற்றும் தக்காளிகளையும் நன்கு பொடியாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு அரைப்பதற்கு தேவையான பொருட்களான தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, பொட்டுக்கடலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
- பிரஷர் குக்கரை சூடாக்கி, எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
- இதனுடன் பிரியாணி இலை மற்றும் கல்பாசி சேர்க்கவும். சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
- புதினா இலைகள் மற்றும் கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும். பின்னர் தக்காளி துண்டுகளைச் சேர்த்து நன்கு குழையும் படி வதக்கவும்.
- இதனுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
- பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதுகளை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
- ஒன்றரை கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு தயிர் சேது நன்கு கலக்கவும்.
- பிறகு பிரஷர் குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்க வேண்டும்.
- சுவையான சரவணபவன் வெஜிடபிள் குருமா தயார்.



Click it and Unblock the Notifications











