ரோட்டுக்கடை தோசை சாம்பார் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Rottukadai Dosa Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் தோசை தான் சுடப் போகிறீர்களா? அந்த தோசைக்கு ஒரு அருமையான செய்ய வேண்டுமா? எப்போதும் ஒரே சுவையில் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ரோட்டுக்கடை தோசை சாம்பாரை செய்து பாருங்கள்.

இந்த தோசை சாம்பார் மிகவும் ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சாம்பாரை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் சுவை அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு இந்த சாம்பாரை கொடுத்தால், வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Rottukadai Dosa Sambar How To Make a Dosa Sambar Recipe

உங்களுக்கு ரோட்டுக்கடை தோசை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தோசை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கேரட் - 1 (நறுக்கியது)
* பரங்கிக்காய் - 1/2 கப் (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1 கப்
* விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி, சிறிது நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாசிப்பருப்பை குக்கரில் அப்படியே நீருடன் சேர்த்து, அத்துடன் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கேரட், பரங்கிக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் 1 கப் நீரை ஊற்ற வேண்டும்.
* அடுத்து அதில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பருப்பை மசித்து விட வேண்டும்.
* பின் அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்ததும், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரோட்டுக்கடை தோசை சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 11, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion