Latest Updates
-
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
Poricha Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் தவறாமல் வீட்டில் ரசம் வைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் வைப்பீர்களா? குறிப்பாக புளி சேர்த்து தான் ரசம் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை புளி சேர்க்காமல் சற்று வித்தியாசமான சுவையில் பொரிச்ச ரசம் செய்யுங்கள். இப்படி ரசம் செய்யும் போது, வீட்டில் உள்ளோர் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். இந்த ரசத்தை ஒருமுறை வீட்டில் செய்தால், பின் வாரம் ஒருமுறை இந்த ரசத்தை செய்ய சொல்வார்கள்.

உங்களுக்கு பொரிச்ச ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரிச்ச ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கட்டிப் பெருங்காயம் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப் + 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து,
அத்துடன் சிறிது கட்டிப் பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் 3 கப் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு தக்காளியை மென்மையாகும் வரை
வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 2 1/2 டேபிள்
ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, 1
டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 டீஸ்பூன் மல்லி, 1 டீஸ்பூன் மிளகு, 5 வரமிளகாய்
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சீரகத்தை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, இட்லி பொடி
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை சேர்த்து,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நுரைக்கட்ட
வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ரசம் தாளிப்பதற்கு சிறு வாணலியை வைத்து,
அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்துடன் சேர்த்து கிளறி,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பொரிச்ச ரசம் தயார்.



Click it and Unblock the Notifications











