Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.. சௌ சௌ பொரிச்ச கூட்டு
Chow Chow Poricha Kootu: தினமும் மதியம் சாதத்துக்கு பொரியல், கூட்டு என ஏதாவது ஒன்று செய்வீர்களா? இன்று மதியம் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா? அப்படியானால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு ஒரு கூட்டு செய்யுங்கள்.
இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு சாதத்திற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருப்பதோடு, இதை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும்.

மாலை வேளையில் நீங்கள் வீட்டிற்கு சென்றதும், சப்பாத்திக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த சௌ சௌ பொரிச்ச கூட்டு செய்யலாம். இதனால் ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை, இன்னொரு சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சௌ சௌ பொரிச்ச கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சொள - 1
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் பாசிப்பருப்பை கழுவி, அதை குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி,
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 2
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌ காயை சேர்த்து, சிறிது உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை குக்கரில் உள்ள காயுடன் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலை பருப்பு
சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான சௌ சௌ பொரிச்ச கூட்டு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
