1 கப் வேர்க்கடலையையும், 2 தக்காளியையும்.. கொதிக்குற நீரில் போட்டு வேக வெச்சு சட்னி செய்யுங்க.. அள்ளும்..

Posted By:

Peanut Toor Dal Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? வேர்க்கடலை, துவரம் பருப்பு மற்றும் தக்காளி இருந்தால், கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து சட்னி செய்யுங்கள்.

இப்படி செய்யும் சட்னி வழக்கமாக சாப்பிடும் சட்னியை விட வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இது இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Peanut Toor Dal Chutney How To Make a Peanut Toor Dal Chutney Recipe

உங்களுக்கு வேர்க்கடலை துவரம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை துவரம் பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* தண்ணீர் - 2 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 8
* தக்காளி - 2 (லேசாக கீறியது)

வறுத்து அரைப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* துவரம் பருப்பு - 1/2 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் வறுத்த வேர்க்கடலை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் லேசாக கீறிவிட்ட தக்காளிகளை சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* தக்காளியின் தோல் உரிய தொடங்கினால், அடுப்பை அணைத்துவிட்டு, அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் தக்காளியின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துவரம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, துவரம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் குளிர வைத்த துவரம் பருப்பு கலவையை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வேக வைத்த வேர்க்கடலை, தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை போட்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்ததுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை துவரம் பருப்பு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 30, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion