Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
வேர்க்கடலை வெச்சு ஒருமுறை இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. கறி குழம்பே தோத்துப் போயிடும்...
Peanut Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வீடே மணக்கும் வகையில் ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலையைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த வேர்க்கடலை கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி கறிக் குழம்பே தோற்றுப் போகும் அளவில் கமகமவென்று ருசியாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1 கப்/200 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புதினா - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 3 (நறுக்கியது)
* முந்திரி - 10
* பூண்டு - 5-6
* இஞ்சி - 2 துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை வேர்க்கடலையை கழுவி, நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, பூண்டு, இஞ்சி, மிளகாய்
தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை, புதினா சேர்த்து ஒருமுறை வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம்
கிளறி, பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கிரேவியானது ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்கினால், சுவையான வேர்க்கடலை கிரேவி தயார்.
Image Courtesy: Kochis Kitchen Corner



Click it and Unblock the Notifications











