Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
காளானை வைச்சு இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வேற லெவல் சைடிஷா இருக்கும்...!
Mushroom Chutney Recipe in Tamil: வாரத்தில் குறைந்தது நான்கு நாளாவது அனைத்து வீடுகளிலும் இட்லி அல்லது தோசையை செய்து விடுவார்கள். சில வீடுகளில் தினமும் கூட இது இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் இட்லி, தோசை என்றாலே பலருக்கும் வெறுப்பு வந்து விடும். ஆனால் வித்தியாசமான சைடிஷ்களுடன் பரிமாறும் போது அந்த எண்ணம் வராது.
ஆனால் இட்லி, தோசைக்கு புதிய சைடிஷாக என்னதான் செய்வது. சைடிஷ்ஷை தேர்வு செய்வதே ஒரு பெரிய வேலையாக மாறுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக மஷ்ரூமை வைத்து சில்லி, மஞ்சூரியன் போன்றவற்றை செய்வார்கள்.

உண்மையில் மஷ்ரூமை வைத்து இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி அரைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் மஷ்ரூமை வைத்து எப்படி ஒரு சூப்பரான சட்னி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- மஷ்ரூம் - 200 கிராம்
- நறுக்கிய வெங்காயம் - 1கப்
- வரமிளகாய் - 5
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- இஞ்சி - 1 துண்டு
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு.
- துருவிய தேங்காய் - 1கப்
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு .
செய்முறை :
- முதலில் 200 கிராம் மஷ்ரூமை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- இப்போது கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 வரமிளகாய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1 கப் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து கிண்டவும். இத்துடன் பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, புளி சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இந்த கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கூட 1 கப் தேங்காய் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் 1 ஸ்பூன் உளுந்து, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் தாளிப்பை சட்னியில் சேர்த்து கிண்டிவிட்டால், சுவையான மஷ்ரூம் சட்னி ரெடி.
- இந்த சட்னியை இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துடனும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் சுவை வேற லெவலில் இருக்கும்.



Click it and Unblock the Notifications











