Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
Mughalai Egg Curry Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான முகலாய ஸ்டைல் முட்டை கிரேவி செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக தோன்றும். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம்.
இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சூப்பரான முட்டைக் குழம்பை செய்வதற்கு ஒரு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். இந்த கறி முகலாய மன்னர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. இப்போதும் பல ரெஸ்டாரண்ட்களில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் சைடிஷாக இதுதான் உள்ளது.

உங்களுக்கு முகாலய முட்டைக் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகாலய முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 வேக வைத்த முட்டை
- 1 ஸ்பூன் எண்ணெய்
மசாலா அரைக்க:
- 2 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை துண்டு
- 10 பூண்டு பல்
- 2 இன்ச் இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் நெய்
கிரேவி செய்ய:
- 10 முந்திரிப் பருப்பு
- 10 பாதாம்
- 2 ஸ்பூன் தயிர்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 பிரியாணி இலை
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பை 20 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும்.
- இவை ஊறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, வேகவைத்த முட்டைகளை பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில், 1 ஸ்பூன் நெய்யை சூடாக்கவும். அதில் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து, அவை வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- ஆறியதும், மென்மையான சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும்.
- பின் அதே கடாயில், நெய் மற்றும் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும். பின்னர் சீரகம் மற்றும் பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
- பின் தயாரித்த மசாலா விழுதைச் சேர்த்து,மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.
- ¼ கப் தண்ணீர் சேர்த்து, கிரேவியை குறைந்த தீயில் மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகும் கொதிக்க விடவும்.
- தயிர் சேர்த்து கிரேவியை மேலும் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
- பின்னர் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கடைசியாக வறுத்த முட்டைகளைச் சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் அட்டகாசமான முகாலய முட்டை குருமா ரெடி!



Click it and Unblock the Notifications











