Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தோசைக்கு ஆரோக்கியமான சைடிஷ் செய்யணுமா? இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க... டேஸ்ட் அசத்தலா இருக்கும்...!
Mudakathan Chutney Recipe in Tamil: கீரை என்றாலே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒன்று. ஒவ்வொரு கீரைக்கும் வெவ்வேறு வகையான தனி சிறப்பு இருக்கு. முருங்கை கீரைக்கு அடுத்து இந்த கீரை தான் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.
மேலும் இதில் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருப்பதால் எலும்பையும் வலுப்படுத்துகிறது. இது மூட்டுவலிக்கு ஏற்ற சிறந்த மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது. நீங்க நினைக்கிறது சரி தான், வாங்க முடக்கத்தான் கீரையில் எப்படி சட்னி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :
- முடக்கத்தான் கீரை - 1 கட்டு
- கொத்தமல்லி இலை - ½ கட்டு
- தயிர் - ½ கப்
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1
- தேங்காய் - ½ மூடி
- இஞ்சி - 1 டீ ஸ்பூன்
- உளுந்து பருப்பு - 2 டீ ஸ்பூன்
- கடலைபருப்பு - 2 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு - 5 அல்லது 6 பல்
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- உளுந்து பருப்பு - ½ டீ ஸ்பூன்
- கடலைபருப்பு - ½ டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 2
செய்முறை:
- முடக்கத்தான் கீரையை நன்றாக மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
- கொத்தமல்லி இலையையும் மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
- அதன் மீது கருப்பு நிற பூஞ்சை இருந்தால் தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்யவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- புளியின் மீது இருக்கும் ஓடு மற்றும் தூசியை நீக்கி ஓடும் தண்ணீரில் அலசி எடுத்து வைத்து கொள்ளவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பப்படி எடுத்து கொள்ளவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளி தக்காளியை காம்பு பகுதியை நீக்கி நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் உளுந்து பருப்பு, மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- அதில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- நன்றாக ஆறியதும் மிக்சியில் சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- அதனுடன் கடுகு சேர்த்து பொரிந்ததும் வரமிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின் அதை சட்னி உடன் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான முடக்கத்தான் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











