Latest Updates
-
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1
அடுத்தமுறை சிக்கன் வறுவலை இப்படி ஒரு மசாலா அரைச்சு செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Malli Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் வாங்குனா வறுவல் செய்வீங்களா? அதுவும் எப்பவும் ஒரே சுவையில் தான் சிக்கன் வறுவலை செய்வீங்களா? அப்படியானால் அடுத்தமுறை சிக்கன் வறுவல் செய்வதாக இருந்தால், மல்லி சிக்கன் வறுவலை செய்யுங்கள்.
இந்த சிக்கன் வறுவல் சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் பனி காலத்தில் இப்படி காரசாரமான மல்லி சிக்கனை செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சிக்கனை செய்தால், அடிக்கடி இந்த சிக்கனை செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு மல்லி சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மல்லி சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு -
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 6
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 6
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 10 இலை
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வதக்குவதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த சிக்கன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வறுவலுக்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* முந்திரி - 8
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சுள் தூள்
ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி மூடி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் முந்திரியை சேர்த்து, பச்சை மிளகாயின் நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி, புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, பேஸ்ட் போல்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்த சிக்கனை சேர்த்து, அத்துடன் தயிர் மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து, சிக்கனில் இருந்து நீர் வெளியேறும் வரை 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வெளியேறி, ஓரளவு நீர் வற்றியதும், அதை
இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், வரமிளகாய், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் அரைத்த கொத்தமல்லி
விழுது, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து, சிறிது நீரை தெளித்து,
நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கனின் நிறம் மாறி, பச்சை வாசனை போய் வறுவல் போன்று வந்ததும்,
மிளகுத் தூள் சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான மல்லி சிக்கன் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











