Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிக்கனை வாங்குனா.. இந்த ஸ்டைல்-ல பெப்பர் சிக்கன் வறுவல் செய்யுங்க.. டக்கரா இருக்கும்...
Pepper Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி பிடித்துள்ளதா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு மிளகு வறுவலை செய்து கொடுங்கள். அதுவும் தனியாக ஒரு மசாலாவை வறுத்து அரைத்து பொடி செய்து, மிளகு வறுவலை செய்யும் போது இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த பெப்பர் சிக்கன் வறுவலை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவை மிகவும் அற்புதமாக இருப்பதோடு, சளி முறிந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு பெப்பர் சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெப்பர் சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - கறிவேப்பிலை
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* அரைத்த மசாலா - 3 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
சோம்பு, மிளகு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, அரைத்த மசாலா பொடி, மிளகாய் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரிய வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பெப்பர் சிக்கன்
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications