கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றது-ன்னு பாத்து மறக்காம செஞ்சு பாருங்க...

Posted By:

Karthigai Deepam Special Sweet Appam Recipe In Tamil: கார்த்திகை தீபம் வரப்போகிறது. இந்த கார்த்திகை தீபத்தன்று வீட்டில் நிச்சயம் ஏதாவது ஒரு பலகாரத்தை செய்து கடவுளுக்கு படைத்து வழிபாடு செய்வோம். அப்படி இந்த கார்த்திகை தீபத்திற்கு ஒரு அருமையான பலகாரம் செய்ய நினைத்தால், பஞ்சு போன்ற அப்பம் செய்யுங்கள்.

இந்த அப்பம் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Karthigai Deepam Special Recipe How To Make a Sweet Appam

உங்களுக்கு கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 டம்ளர்
* அவல் - 2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 3/4 டம்ளர்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* தேங்காய் - 2 பத்தை
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் 2 டேபிள் ஸ்பூன் அவலை நீரில் கழுவிவிட்டு, சிறிது நீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 3/4 டம்ளர் பொடித்த வெல்லத்தை எடுத்து, அத்துடன் 1/4 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி நன்கு ஊறிய பின், நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, மிக்சர் ஜாரில் போட்டு முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அவல், தேங்காய் மற்றும் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* மாவின் பதம் என்றால், இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்து, அத்துடன் சிறிது உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து, விருப்பப்பட்டால் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான ஸ்வீட் அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 30, 2025, 19:23 [IST]
Desktop Bottom Promotion