Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
மணமணக்கும்.. இறால் கிரேவி.. இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. சாதத்துக்கு சும்மா அள்ளும்...
Iral Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் எடுப்பீர்களா? எப்போது இறாலை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் கிரேவி செய்வதாக இருந்தால் ஒரே ருசியில் தான் இறால் கிரேவி செய்வீர்களா? இப்படி செய்து போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான சுவையில் இறால் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில பொருட்களை வறுத்து அரைத்து மசாலா செய்து, கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இறால் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* நெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிய துண்டு
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 7 பல் (தட்டிக் கொள்ளவும்)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* சின்ன பெரிய வெங்காயம் - 1 ()
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 100 மிலி
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* பெரிய தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* இறால் - 2 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை, கல்பாசி, மிளகு, சீரகம்,
முந்திரி சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை
சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து இறாலை சுத்தம் செய்து, நீரை முற்றிலும் வடித்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த இறாலுடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்,
அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, ஏற்கனவே உப்பு
சேர்த்திருப்பதால், சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்தது நன்கு 3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து
நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான இறால் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











