Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சுகரை குறைக்கும் முளைகட்டிய பச்சைப்பயறு தோசை... ஒருமுறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..!
பச்சை பயிறு ஆரோக்கியமான காலை உணவாகும்.. இதனை இரவிலும் செய்து சாப்பிடலாம்.. இது முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமே தரக்கூடியது.. இதனை செய்து சாப்பிடுவதினால் உடல் எடை குறைவதுடன் உடலில் உள்ள சுகரின் அளவும் சரியாக பராமரிக்கப்படுகிறது..வாங்க இந்த பச்சை பயிறு தோசையை எப்படி வீட்டில் செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.. அதில் மிக முக்கியமான ஒன்று முளைக்கட்டிய பயிறு வகைகள்.. இதனை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால் தோசையாக செய்து சாப்பிடலாம்.. இது குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் ஆரோக்கியமனது..

தேவையான பொருட்கள்
பச்சை பச்சை பயறு - ஒரு கப்
அரிசி -2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.. பின்னர் வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்..
2. ஊறவைத்த பச்சை பயறை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4. இப்போது தோசை கல்லை அடுப்பில் வைக்க வேண்டும்.. அது சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேகவிடவும். வேக விட்டபிறகு அதை எடுத்து தட்டில் வைத்து சுவையான கார சட்னி உடன் பரிமாறலாம்.. செம்ம டேஸ்டாக இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
முளைகட்டிய பச்சை பயறின் நன்மைகள்
1. முளைக்கட்டிய இந்த பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது..
2. இதில் வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்



Click it and Unblock the Notifications












