Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
Dubai Airport Alert for Indians: Don't Come Unless Flight Confirmed! Amid War Tensions -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
SBI பேங்க் புது ரூல்ஸ்.. புதிய லிமிட்.. ஏப்ரல் 1 முதல் அமல்.. இனி மாதத்திற்கு அதிகபட்சம் ஆக? | SBI Bank Card Reward Points New Rules April 1 -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பக்குவத்துல அரைங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Hotel Vellai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எந்த டிபனை செய்தாலும், அதற்கு நிச்சயம் தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? தேங்காய் சட்னியை பலவாறு செய்யலாம். அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சுவையில் தேங்காய் சட்னியை செய்ய நினைத்தால், அதற்கு ஒருசில பொருட்களை சேர்த்து செய்தாலே போதுமானது.
முக்கியமாக இந்த ஸ்டைல் தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலையோ, வேர்க்கடலையோ தேவைப்படாது. சிறிய துண்டு புளியை சேர்க்க வேண்டும். இந்த ஸ்டைல் சட்னி இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப் (நறுக்கியது)
* பூண்டு - 3 சிறிய பல்
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய் மற்றும் 3 சிறிய
பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 2 பச்சை மிளகாய், சிறிய துண்டு புளி, 1 கொத்து
கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிது உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை
மட்டும் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த சட்னி சற்று கெட்டியாக
இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/4
டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்துவிட்டால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











