Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
ஒருவாட்டி தேங்காய் சட்னியை இந்த மாதிரி செஞ்சு பாருங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Green Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அவற்றிற்கு எப்போதும் உங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னி செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? சில சமயங்களில் உங்களின் தேங்காய் சுவையின்றி இருக்குமா?
அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்வதாக இருந்தால், அதன் சுவை இன்னும் பிரமாதமாக இருக்க, அவற்றுடன் 2 பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அது தான் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை. இவ்விரண்டும் சத்தானது மட்டுன்றி, சட்னிக்கு பச்சை நிறத்துடன், நல்ல சுவையையும் தரக்கூடியவை.

முக்கியமாக இப்படி தேங்காய் சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சட்னியை தொட்டு சாப்பிடாமல், ஊற்றி ஊற வைத்து பிசைந்து சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த க்ரீன் தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 3
* பூண்டு - 2 பல்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை ஒரு கப் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் பொட்டுக்கடலை, 3 பச்சை மிளகாய், 3 சின்ன
வெங்காயம், 2 பல் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிறிது சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் புளி ஒரு சிறிய துண்டு சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சற்று
தாராளமாக நீரை ஊற்றி, தண்ணி சட்னி போல் கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான க்ரீன் தேங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











