Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ருசியான... மீல்மேக்கர் கிரேவி
சப்பாத்திக்கு ஒரு ருசியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு மீல்மேக்கர் கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும்.
சப்பாத்திக்கு ஒரு ருசியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதிலும் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு மீல்மேக்கர் கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். மீல்மேக்கர் சோயா வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் சோயா பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதிலும் மீல்மேக்கரை கிரேவியாக செய்தால், சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண், புல்கா போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம். கீழே மீல்மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 2 கப்
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய இலைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் அல்லது பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் 3-4 முறை அலசி, பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல்மேக்கரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தைப் போட்டு 1 கப் நீர் ஊற்றி வேக வைத்து இறக்கி, குளிர வைக்கவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், வெங்காய பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி சிறிது நேரம் நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு மீல்மேக்கரை போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும், காய்ந்த வெந்தய கீரை சேர்த்து இறக்கிவிடவும்.
* இறுதியில், அதன் மேல் க்ரீம் சேர்த்து கிளறிவிடலாம் அல்லது பாலை ஊற்றினால், மீண்டும் அடுப்பில் வைத்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கிடவும். இப்போது ருசியான மீல்மேக்கர் கிரேவி தயார்!



Click it and Unblock the Notifications











