Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
செட்டிநாடு டங்கார் சட்னி ரெசிபி... இத ஒருதடவை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வேற லெவல் சைடிஷா இருக்கும்...!
Chettinad Dangar Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயமும், பூண்டும், ஒரு தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் டங்கார் சட்னி செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு ஸ்டைல் டங்கார் சட்னி வழக்கமான பூண்டு சட்னி போல அல்லாமல் ஒரு சில பொருட்கள் கூடுதலாக சேர்த்து அரைக்கப்படுவதால் அதன் சுவை வித்தியாசமாகவும், வேற லெவலிலும் இருக்கும். இந்த மாதிரி வித்தியாசமான சட்னியை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். ஒருமுறை இப்படி சட்னியை செய்து கொடுத்தால் இனிமேல் இட்லி, தோசை என்றாலே இந்த சட்னியைத்தான் செய்வீர்கள்.

உங்களுக்கு செட்டிநாடு டங்கார் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு டங்கார் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 15 சின்ன வெங்காயம்
- 15 பூண்டு பல்
- 1 தக்காளி
- ½ ஸ்பூன் புளி
- 1 ஸ்பூன் வெல்லம்
- அரை ஸ்பூன் மஞ்சள்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 8 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ½ ஸ்பூன் புளியை கால் கப் சூடான நீரில் ஊற வைக்கவும். 20 நிமிடங்கள் தனியாக வைக்கவும்.
- புளி நன்றாக ஊறியதும் கைகளால் நன்றாக கரைத்து மேலும் கால் கப் தண்ணீர் சேர்த்து புளிச்சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி நன்றாக நறுக்கவும். மற்ற பொருட்களையும் தயார் செய்யவும்.
- ஒரு கடாயில் எண்ணெயைஊற்றி சூடாக்கவும். அதில் ½ தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு மற்றும் 8 வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து சிறிது உப்பு தூவி தக்காளி நன்கு குழையும் வரை நன்றாக வதக்கவும்.
- வதக்கிய பொருட்களுடன் புளி சாற்றை கலந்து சட்னி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
- கடைசியாக 1 டீஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலக்கி 2 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு டங்கார் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











