இட்லி, தோசைக்கு கருப்பு உளுந்தை வெச்சு இப்படி சட்னி செய்யுங்க.. சுவையாவும் இருக்கும்.. சத்தானதும் கூட..

Posted By:

Black Gram Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இட்லி, தோசைக்கு ஒரு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? இன்று இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் கருப்பு உளுத்தம் பருப்பு உள்ளதா?

அப்படியானால் அந்த கருப்பு உளுத்தம் பருப்பைக் கொண்டு ஒரு சத்தான மற்றும் ருசியான சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.

Black Gram Chutney: How To Make a Karuppu Ulunthu Chutney Recipe

உங்களுக்கு கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* புளி - 1 துண்டு
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 3 துண்டு

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு உளுந்தை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், புளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் மென்மையாக அரைத்துவிட வேண்டாம். சற்று கொரகொரவென்றே அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.

Image Courtesy: Archana's Kitchen

[ of 5 - Users]
Story first published: Friday, February 16, 2024, 7:16 [IST]
Desktop Bottom Promotion