Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
கருப்பு கொண்டைக்கடலையை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப்போயிடும்..
Black Channa Gravy Recipe In Tamil: இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சன்னா கிரேவியை செய்ய சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி கொண்டைக்கடலை கிரேவியை செய்வீர்களா?
அப்படியானால் எப்போதும் ஒரே ஸ்டைலில் கொண்டைக்கடலை கிரேவியை செய்யாமல், இன்று சற்று வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவியானது மட்டன் கிரேவியே தோற்றுப்போகும் அளவில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கருப்பு கொண்டைக்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கொண்டைக்கடலை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு கொண்டைக்கடலை/சன்னா - 1 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 4
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கருப்பு கொண்டைக்கடலையை சுடுநீரில் போட்டு மூடி வைத்து,
குறைந்தது 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை போட்டு, அத்துடன்
நறுக்கிய வெங்காயம், சீரகத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள்
தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, எண்ணெய், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், பிரியாணி இலை மற்றும்
கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஒருமுறை கிளறி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அரைத்த
தக்காளியையும் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து, 3 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி,
மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கருப்பு
கொண்டைக்கடலை கிரேவி தயார்.
Image Courtesy: Indian Veggie Delight



Click it and Unblock the Notifications











