4 அப்பளம் இருந்தா.. இப்படி செய்யுங்க.. சாதம், டிபன்-ன்னு எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..

Posted By:

Appala Thuvaiyal Recipe In Tamil: நீங்கள் இதுவரை எத்தனையோ சைடு டிஷ்களை ட்ரை செய்திருப்பீர்கள். அதுவும் மதிய வேளையில் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், வறுவல் என்று செய்திருப்பீர்கள். சில சமயங்களில் எதுவும் இல்லாத நேரத்தில் துவையலை செய்து சாப்பிடுவோம். உங்கள் வீட்டிலும் அப்படி அடிக்கடி துவையல் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் ஒரே மாதிரியான துவையலை தான் செய்வீர்களா?

அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான துவையலை செய்யுங்கள். அதுவும் அப்பளம் இருந்தால், அந்த அப்பளத்தைக் கொண்டு ருசியான துவையல் செய்யுங்கள். இந்த அப்பள துவையல் இட்லி, தோசை போன்றவற்றுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த துவையல் அப்பளத்தில் செய்தது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். அந்த அளவில் சுவை வித்தியாசமாக இருக்கும்.

Appala Thuvaiyal How To Make a Appala Thuvaiyal Recipe

உங்களுக்கு அப்பள துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 4 ஸ்பூன்
* அப்பளம் - 4
* தேங்காய் - 2 சில்லு
* சின்ன வெங்காயம் - 10
* வரமிளகாய் - 3
* புளி - சிறிதளவு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 4 அப்பளத்தை நொறுக்கி போட்டு, ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 2 சில்லு தேங்காயை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த தேங்காயை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், சிறிது புளி, கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, துவையல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது சுவையான அப்பள துவையல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 12, 2025, 14:40 [IST]
Desktop Bottom Promotion