சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவி

Posted By:

Andhra Style Bottle Gourd Gravy: உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உணவுகள் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை அடிக்கடி முயற்சிப்பீர்களா? இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா?

அப்படியானால் அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி நாம் வழக்கமாக செய்யும் கிரேவியை விட வித்தியாசமாக இருக்கும். அதே சமயம் இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.

 Andhra Style Bottle Gourd Gravy Recipe In Tamil

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சுரைக்காய் - 2 கப் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* துவரம் பருப்பு - 1 கப் (நீரில் 30 நிமிடம் ஊற வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து 10 நொடிகள் வதக்கி, தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, பச்சை மிளகாய் மற்றும் சுரைக்காய் சேர்த்து கிளறி வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள துவரம் பருப்பு கழுவி, அதையும் சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சுரைக்காய் கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Desktop Bottom Promotion