Just In
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 16 hrs ago
மைதா போண்டா
- 16 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 17 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
- Movies
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
- Sports
இந்திய இளம் திறமைகளை சிறப்பாக மேம்படுத்தியிருக்காரு டிராவிட்... ரஹானே பாராட்டு
- Automobiles
வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மோடி அரசு அதிரடி திட்டம்... யாரெல்லாம் கட்டணும்? எவ்வளவு கட்டணும் தெரியுமா?
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கருவில் இருப்பது என்ன குழந்தைனு வீட்டிலேயே தெரிஞ்சிக்க அந்த காலத்துல இருந்தே இருக்கும் வழிகள்...!
தனக்கு பிறக்கப்போவது என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அனைவருக்கும் இருக்கும். கடந்த காலங்களில் அதனை தெரிந்து கொள்ளும் முறையும் இருந்தது. ஆனால் பலரும் அதனை தவறான வழிகளில் பயன்படுத்தியதால் அதனை அரசாங்கம் தடைசெய்தது. இருப்பினும், குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள சில வேடிக்கையான வழிகள் வரலாற்றில் உள்ளது.
பழங்காலத்திலிருந்தே மக்கள் பிறக்கப்போகும் குழந்தைகளின் பாலினத்தை கணிக்க முயற்சித்து வருகின்றனர். சந்திரனின் நிலையை கவனிப்பதில் இருந்து பார்லி போன்ற பயிர்களைப் பயன்படுத்துவது வரை பல்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. இவை துல்லியமற்றவையாக இருந்தாலும் இது மக்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது. குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது என்பது எப்போதும் தவறான ஒன்றுதான். வரலாற்றின் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான பாலினத்தை கண்டறியும் முறைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சீன பாலின விளக்கப்படம்
சீன பாலின விளக்கப்படம் பாலினத்தை கணிக்க ஒரு பிரபலமான வழியாகும். இது ஒரு குறிப்பிட்ட விளக்கப்பட முறையைப் பயன்படுத்துகிறது, அங்கு குழந்தையின் பாலினம் கருத்தரிக்கப்பட்ட மாதத்தையும், கருத்தரிக்கும் போது தாயின் வயதையும் காரணிகளாக தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு, விளக்கப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் குழந்தை கருத்தரிக்கப்பட்டு, அந்த நேரத்தில் நீங்கள் 28 வயதாக இருந்தால், உங்கள் குழந்தை ஒரு பையனாக இருக்க வாய்ப்புள்ளது.

மாயன் பாலின விளக்கப்படம்
சீன பாலின விளக்கப்படத்தின் மற்றொரு வடிவம்தான் மாயன் முறை. இது முந்தையதைப் போலவே இருக்கிறது, கருத்தரிக்கும் போது தாயின் வயதைப் பயன்படுத்துகிறது. ஆனால் சீன வழியைப் போலன்றி, மாதத்திற்கு பதிலாக குழந்தை கருத்தரித்த ஆண்டை மாயன் முறை பயன்படுத்துகிறது. கருத்தரிக்கும் போது உங்கள் வயதைச் சேர்த்து, உங்கள் குழந்தை கருத்தரிக்கப்பட்ட ஆண்டில் சேர்க்கவும். மாயன்களின் கூற்றுப்படி, இதன் விளைவாக ஒற்றைப்படை எண் என்றால் ஆண் குழந்தை எனவும், இரட்டைப்படை எண்ணாக இருந்தால் பெண் குழந்தை எனவும் கணக்கிடப்பட்டது.

வயிறு சோதனை
கர்ப்பமான பெண்ணின் வயிறு குழந்தையின் பாலினத்தை கணிக்கும் மற்றொரு விஷயமாகும். இந்த சோதனையின்படி, உங்கள் குழந்தை பம்ப் நீண்டு ஒரு கட்டத்திற்கு வந்தால், நீங்கள் ஒரு பையனை சுமக்கிறீர்கள். மறுபுறம் உங்கள் வயிறு வட்டமாக இருந்தால், நீங்கள் ஒரு பெண்ணை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதுல ஏதாவது ஒண்ண தினமும் சாப்பிடற ஆண்களோட விந்தணுக்கள் தரமானதா இருக்குமாம் தெரியுமா?

பசி சோதனை
இந்த சோதனைக்கு கர்ப்பமான பெண்ணின் உடல் மட்டும் போதுமானது. இதில் முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டியது உங்கள் பசி. பண்டைய கால நம்பிக்கைகளின் படி நீங்கள் நினைத்ததை விட உங்கள் பசி உங்கள் குழந்தையைப் பற்றி அதிகம் கூறுகிறது. நீங்கள் ரொட்டி மற்றும் குக்கீகள் போன்ற இனிப்புகள் அல்லது கார்ப்ஸ் உணவுகளுக்கு ஏங்குகிறீர்கள் என்றால் உங்கள் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை அதேசமயம் நீங்கள் உப்பு அல்லது காரமான உணவுகளுக்கு ஏங்குகிறீர்கள் என்றால் உங்கள் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

இதயத்துடிப்பு சோதனை
இதய துடிப்பு சோதனையில் அதில் கொஞ்சம் விஞ்ஞானம் இருக்கலாம், ஆனால் அது நிருபிக்கப்பட்ட முறையல்ல. இதய துடிப்பு சோதனையின்படி, உங்கள் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவர்களின் கருவின் இதய துடிப்பு மட்டுமே. 110 முதல் 130 வரை உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு குறைவாக இருந்தால், நீங்கள் ஒரு பையனை சுமக்கிறீர்கள். ஆனால் இதய துடிப்பு 140 முதல் 160 வரை அதிகமாக இருந்தால், அது ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.

பேக்கிங் சோடா சோதனை
இது அறிவியல் சோதனை போன்றது. இந்த சோதனைக்குத் தேவை பெண்களின் காலை சிறுநீர் ஆகும். ஒரு கோப்பையில் சிறுநீர் கழித்தவுடன், அதில் பேக்கிங் சோடாவை போட்டு கலக்கவும். இந்த சோதனையின்படி, பேக்கிங் சோடா பிசுபிசுத்தால் உங்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை, இல்லையெனில் உங்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை.
இந்த குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களை பல நோய்களுக்கு ஆளுக்குமாம்... உஷார்!

முகப்பொலிவு சோதனை
கர்ப்ப காலத்தில் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்துடன் நிறைய தொடர்புள்ளது. கர்ப்பமாக இருக்கும்போது மென்மையான, ஒளிரும் தோலைக் கொண்ட அதிர்ஷ்டசாலி சிலரில் நீங்கள் ஒருவராக இருந்தால், நீங்கள் ஒரு ஆண் குழந்தையை பெற வாய்ப்புள்ளது. மாறாக முகப்பரு அதிகமாக ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

மனநிலை சோதனை
இது கர்ப்பகாலத்தில் பெண்கள் அனுபவிக்கும் ஹார்மோன் மாற்றங்களை பொறுத்தது. இந்த சோதனையின்படி பெண்களுக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சலான மனநிலை இருந்தால் அவர்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை, மாறாக வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தால் அவர்கள் கருவில் இருப்பது ஆண் குழந்தை.