For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிடலாம் தெரியுமா?

பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ள பெண்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

|

கர்ப்ப காலம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு அற்புதமான காலம். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஏனெனில் இந்த காலத்தில் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களில் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல நோய்களின் அபாயம் உள்ளது. அதில் ஒன்று தான் கர்ப்பகால நீரிழிவு.

Foods For Women With Gestational Diabetes In Tamil

கர்ப்பகால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட சர்க்கரை நோயாகும். மற்ற வகை சர்க்கரை நோயைப் போன்றே, கர்ப்பகால நீரிழிவு உங்கள் செல்கள் குளுக்கோஸை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பாதிக்கிறது. கர்ப்பகால நீரிழிவு இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, தாயையும், வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு, உடற்பயிற்சி மற்றும் தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணிற்கு நீரிழிவு நோய் வந்தால், பிரசவத்திற்கு பின் இரத்த சர்க்கரை அளவு வழக்கமான நிலைக்கு திரும்பும். ஆனால் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அப்பெண்ணிற்கு டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பகால நீரிழிவின் அறிகுறிகள்

கர்ப்பகால நீரிழிவின் அறிகுறிகள்

பெரும்பாலான நேரங்களில் கர்ப்பகால நீரிழிவு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதையும் ஏற்படுத்தாது. அதிகப்படியான தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை தான் கர்ப்பகால நீரிழிவின் சாத்தியமான அறிகுறிகள் ஆகும்.

கர்ப்பகால நீரிழிவு இருந்தால், அவ்வப்போது மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக கடைசி மூன்று மாத காலத்தில் அவசியம் சோதனை செய்யப்பட வேண்டும்.

காரணங்கள்

காரணங்கள்

ஏன் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வருகிறது, ஏன் சிலருக்கு வருவதில்லை என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் கர்ப்பத்திற்கு முன் அதிகப்படியான உடல் எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. பொதுவாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு ஹார்மோன்கள் வேலை செய்யும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் இரத்த சர்க்கரையை திறம்பட செயல்படுத்த முடியாமல் போய், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

பொதுவாக சர்க்கரை நோய் இருந்தால் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ள பெண்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கீழே கர்ப்பகால சர்க்கரை நோய் உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிக்கலான கார்போஹைட்ரேட் உணவுகளை உண்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். அதற்கு மைதா, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை தவிர்த்து, அரை பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, முழு கோதுமை, ஓட்ஸ், தினை, சோளம் போன்ற பாலிஷ் செய்யப்படாத தானியங்களை உட்கொள்ள வேண்டும். இந்த வகை தானியங்கள் கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

தினசரி உணவின் ஒரு பகுதியாக பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பருப்பு வகை உணவுப் பொருட்களில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு மற்றும் இவை இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. ஆனால் பருப்பு வகைகளை நன்கு வேக வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

காய்கறிகள்

காய்கறிகள்

கர்ப்பகால நீரிழிவு நோயைக் கொண்ட பெண்கள் தங்கள் உணவில் ஸ்டார்ச் அல்லது மாவுச்சத்து இல்லாத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் இரத்தத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடச் செய்கின்றன. முக்கியமாக வேர்கள் மற்றும் கிழக்கு வகை காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை கர்ப்பகால நீரிழிவு நோயைக் கொண்ட பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

பழங்கள்

பழங்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் ஒரு நாளைக்கு 200கி பழங்களை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பழச்சாறுகளை அருந்தக்கூடாது. அப்படியே பழங்களை சாப்பிடுவதாக இருந்தால் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், மாதுளை, அவகேடோ போன்ற பழங்களை சாப்பிடலாம்.

பால் பொருட்கள் மற்றும் கோழி, முட்டை

பால் பொருட்கள் மற்றும் கோழி, முட்டை

பால் பொருட்கள் மற்றும் கோழி, முட்டை போன்றவற்றை கர்ப்பகால நீரிழிவு உள்ள பெண்கள் நிச்சயம் சாப்பிடலாம். ஏனெனில் இவற்றில் புரோட்டீன், கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. எனவே இந்த வகையான உணவுகளை சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods For Women With Gestational Diabetes In Tamil

Here are some healthy foods for women with gestational diabetes. Read on to know more...
Story first published: Saturday, November 26, 2022, 17:42 [IST]
Desktop Bottom Promotion