கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட்டா ஆபத்து வரும்னு சொல்லறது வெறும் கட்டுக்கதை தான்னு தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

தர்பூசணிப்பழம் மிகவும் சுவையானது.. அதிக நீர்ச்சத்துக்களை கொண்டது, இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட, ஆனால் இதனை கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட கூடாது என்று சிலர் கூறுவார்கள்.. இது உண்மைதானா? தர்பூசணி பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது ஆபத்தானதா? எதற்காக இப்படி சொல்கிறார்கள்.. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1:

கட்டுக்கதை 1:

கர்ப்ப கால சர்க்கரை நோயானது தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உண்டாகிறது என்றும் எனவே அதிகளவு சர்க்கரை நிறைந்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் ஒரு கட்டுக்கதை நிலவி வருகிறது.

ஆனால் உண்மையில் தர்பூசணிப்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இது சர்க்கரை நோய் பாதிப்பை அதிகப்படுத்தாது. 10 கப் தர்பூசணிப்பழம் சாப்பிட்டால் தான் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

தர்பூசணிப்பழத்தில் சர்க்கரை இல்லை, ஆனால் இது குளூக்கோஸின் அளவை அதிகரிக்க செய்யும். தினமும் ஒன்று அல்லது 2 கப் தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு எந்த வித கெடுதலும் உண்டாகாது. மாறாக நன்மைகளே கிடைக்கும்.

கட்டுக்கதை 2:

கட்டுக்கதை 2:

கருப்பையில் இருக்கும் குழந்தையின் எடை நன்றாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக குழந்தையின் எடை மிக அதிகமாக இருக்க கூடாது. சிலர் தர்பூசணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தினை முன் வைக்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை விட தர்பூசணி சாப்பிடுவது கர்ப்ப காலத்திற்கு மிகவும் நல்லது. இதில் 92% தண்ணீர் உள்ளது மீதி, 7.55 % கார்போஹைட்ரைட் உள்ளது. இது கொழுப்பு அற்றது. எடையை கூட்டாது. இரண்டு கப் தர்பூசணிப்பழத்தில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளது. தர்பூசணிப்பழத்தை சாப்பிடும் போது உடல் எடையை பற்றி யோசிப்பது கடைசியாக தான் இருக்கும்.

கட்டுக்கதை 3:

கட்டுக்கதை 3:

தர்பூசணி சாப்பிடுவது உடலை மிகவும் குளிர்ச்சியை உண்டாக்கும். எனவே தர்பூசணியை சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நீர்ச்சத்து என்பது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஒன்று. இரண்டு கப் வரை தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது.

ஆனால் காய்ச்சல், சளி உள்ள போதும், குளிர்க்காலங்களிலும் தர்பூசணிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கட்டுக்கதை 4:

கட்டுக்கதை 4:

மாறிவிடும். சிலர் தர்பூசணி சாப்பிடுவதால் இது உண்டாகும் என்று கூறுவார்கள் ஆனால் இல்லை. தர்பூசணி உணவை சரியாக செரிக்க வைக்கவும், உணவுக் குழாயை சுத்தம் செய்யவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் புதிதாக அரிந்த அல்லது புதிதாக ஜூஸ் செய்யப்பட்ட தர்பூசணிப்பழத்தை சாப்பிடுவது தான் சிறந்ததாகும்.

ஏன் சாப்பிட வேண்டும்?

ஏன் சாப்பிட வேண்டும்?

தர்பூசணிப் பழத்தை கர்ப்ப காலத்தில் ஏன் சாப்பிட கூடாது என்பதற்கான சில கட்டுக்கதைகளையும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மைகளை பற்றியும் பார்த்தோம். இப்போது ஏன் தர்பூசணிப் பழத்தை கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி காணலாம்.

காலை காய்ச்சல்

காலை காய்ச்சல்

கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதில் இருந்து விடுதலை பெற்று சோர்வையும் களைப்பையும் போக்க தர்பூசணி மிகவும் உதவியாக இருக்கும்.

உடல் வறட்சி

உடல் வறட்சி

நீர் என்பது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. போதிய அளவு நீரை குடிக்கவில்லை என்றால் உடலில் வறட்சி உண்டாகிவிடும். இதனை போக்க தர்பூசணிப்பழம் உதவியாக உள்ளது.

உடல் வலி

உடல் வலி

கர்ப்ப காலத்தில் உடலின் பல்வேறு பகுதிகளில் தசைகளில் உண்டாகும் வலிகளுக்கு தர்பூசணிப்பழம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

எலும்பைப் பாதுகாக்கும்!

எலும்பைப் பாதுகாக்கும்!

தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

எடையைக் குறைக்கும்!

எடையைக் குறைக்கும்!

இதில் பெருமளவுக்கு நீர்தான் இருக்கிறது. கலோரியும் குறைவு. இதனால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.

சருமத்திற்கு...

சருமத்திற்கு...

இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏவாக மாற்றப்படும். இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியாமல், தோலில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is watermelon safe to eat during pregnancy

Is watermelon safe to eat during pregnancy
Subscribe Newsletter