முப்பது வயதில் கர்ப்பமாக இருபது வயதிலேயே இதை எல்லாம் செய்ய வேண்டும்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நிறைய பெண்கள் கர்ப்பமடைவதில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனைகளை நாடுகின்றனர். கர்ப்பபை நீர் கட்டி போன்ற பிரச்சனைகள் பரவலாக பெண்களை தாக்குகின்றன. அதிஷ்டவசமாக இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் உள்ளன.

பெண்கள் தங்களது இருபது வயதிலேயே ஒரு சில விஷயங்களை செய்வதால் முப்பது வயதிலும் கூட எளிதாக கர்ப்பமடையலாம் என பெண்கள் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவை என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஹார்மோனை நடுநிலைப்படுத்தும் உணவுகள்

1. ஹார்மோனை நடுநிலைப்படுத்தும் உணவுகள்

உங்களது கருவுறும் தன்மையை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அவோகேடா மற்றும் பருவகாலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது உங்களது உடலுக்கு சரியான ஊட்டசத்துக்கள் கிடைக்க உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு உண்டாகும் அண்டவிடுப்பு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து இவை காக்கின்றன. அண்டவிடுப்பின் போது பச்சை காய்கறிகளின் ஜீஸ் அருந்துதல், சக்கரைவல்லி கிழங்கை மாதவிடாய்க்கு முன் சாப்பிடுவது, மாதவிடாயின் போது அவோகேடா அதிகமாக சாப்பிடுவதல் வேண்டும்.

2. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

2. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

நமது அன்றாட வாழ்வில் பல மன அழுத்தங்கள் இருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் தரும் காரியங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா மற்றும் தியானம் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

3. அழகு சாதன பொருட்கள்

3. அழகு சாதன பொருட்கள்

நீங்கள் தினசரி பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் அதிகமாக கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிக்கின்றன. எனவே நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் எண்டோகிரைன்-டிசறுப்டர் (endocrine-disruptor) இல்லாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியம். முடிந்தவரை இயற்கையான பொருட்களை அழகுக்காக பயன்படுத்தலாம்.

4. கருத்தடை மாத்திரைகள்

4. கருத்தடை மாத்திரைகள்

கருத்தடைக்காக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் முகப்பருக்களை போக்கவும், மாதவிடாயை ஒழுங்கு செய்யவும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தாதீர்கள். கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவது தவறானது.

ஹார்மோன்களை சமன் செய்யக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் கருவுறாமை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Things You Should Do in Twenty for Getting Pregnant in Thirty

Four Things You Should Do in Twenty for Getting Pregnant in Thirty
Story first published: Friday, June 16, 2017, 17:47 [IST]