கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 - 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவில் உள்ளது என்று கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

Ways To Maintain Healthy Baby Weight During Pregnancy

வயிற்றில் வளரும் குழந்தையின் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி உணவுகள்

கலோரி உணவுகள்

கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு நற்பதமான பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

வைட்டமின் மாத்திரைகள்

வைட்டமின் மாத்திரைகள்

பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்ச்சியான சோதனை

தொடர்ச்சியான சோதனை

தொடர்ச்சியாக மகப்பேறு மருத்துவரை சந்தித்தால், குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையைப் பற்றி தெரிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள முடியும். எனவே சோம்பேறித்தனப்பட்டு மருத்துவரிடம் மட்டும் செல்லாமல் இருக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Maintain Healthy Baby Weight During Pregnancy

Here are some ways to maintain healthy baby weight during pregnancy. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter