For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் மாதத்தில் கர்ப்பிணிகள் விரதம் இருப்பது நல்லதா?

By Ashok CR
|

ரமலான் என்பது இஸ்லாமிய மதத்தினர் விரதம் கடைப்பிடிக்கும் ஒரு புனிதமான மாதமாகும். இக்காலத்தில், சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை, பக்தியுடைய இஸ்லாமியர்கள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இரவு நேரத்தில் மட்டுமே அவர்கள் உணவருந்தலாம். சரி, நீங்கள் கர்ப்பிணி பெண் என்றால், ரமலான் மாதம் உங்களிடம் ஒரு பெரிய கேள்வியை வைக்கிறது. ரமலான் மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் விரதம் இருக்கலாமா அல்லது அதை தவிர்க்கலாமா?

ரமலான் விரதத்தை கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க தேவையில்லை என்பதே பல இஸ்லாமியர்களின் கருத்தாகும். அதற்கு காரணம் கர்ப்பிணி பெண்கள், சின்ன குழந்தைகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க தேவையில்லை என இஸ்லாம் மதம் கூறுகிறது. இருப்பினும் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால், அவர்கள் ரமலான் விரதத்தை கடைப்பிடிக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர்.

மதத்தின் அடிப்படையில் இந்த வாதத்தின் மீது நாம் கருத்து கூற முடியாது. இருப்பினும் கர்ப்ப காலத்தில் விரதம் கடைப்பிடிப்பது சில விளைவுகளை உண்டாக்கும். ரமலான் விரதத்தை கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடித்தால் கீழ்கூறிய சில சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குமட்டல்

குமட்டல்

கர்ப்பமாக இருப்பதால் ஏற்கனவே உங்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் உண்டாகும். வெறும் வயிற்றுடன் இருப்பதால் குமட்டல் அதிகரிக்க தான் செய்யும்.

குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தை

குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தை

கர்ப்ப காலத்தின் போது விரதம் இருந்தால், பிறக்கும் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் விரதம் இருக்கும் தாய்மார்களுக்கும் விரதம் இருக்காத தாய்மார்களுக்கும் உள்ள வேற்பாடு மிகச்சிறியதே.

மயக்கம்

மயக்கம்

உங்கள் உடலில் உள்ள அனைத்து ஊட்டச்சத்தையும் உறிஞ்சி ஒரு ஒட்டுண்ணியை போல் செயல்படுகிறது ஒரு குழந்தை. அதனால் போதிய இடைவேளையில் நீங்கள் உணவருந்தவில்லை என்றால், உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைந்து விடும். இது மயக்கம் மற்றும் இருட்டடிப்பை உண்டாக்கி விடும்.

மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

கர்ப்ப காலத்தில் உங்கள் மெட்டபாலிசம் ஆமை வேகத்தில் இருக்கும். அதனால் இந்நேரத்தில் போதிய இடைவேளையில் உணவருந்துவது அவசியமாகும். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இரவு நேரம் மூலமாக மட்டுமே நிரப்பினால், அது செரிமானமின்மை மற்றும் அசிடிட்டியை உண்டாக்கி விடும்.

டிப்ஸ்

டிப்ஸ்

இந்த வரையறை இருக்கும் போதிலும், கர்ப்ப காலத்தில் விரதம் கடைப்பிடிக்க உங்களுக்கு ஆற்றல் இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் அதற்கு வழி உள்ளது. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ரமலான் விரதத்தை நீங்கள் கடைப்பிடிக்க கீழ்கூறிய வழிகளை பின்பற்றுங்கள்.

உங்கள் நாளை புரட்டி போடுங்கள்

உங்கள் நாளை புரட்டி போடுங்கள்

உங்கள் நாளின் அட்டவணையை திருப்பி போடுங்கள். அதாவது பகல் நேரத்தில் தூங்கி, ஒரு மாத காலத்திற்கு இரவு நேரத்தில் விழித்திருங்கள். விரதம் இருக்கும் காலத்தில் போதுமான ஓய்வு கிடைக்க இது உறுதி செய்யும்.

முடிந்த அளவு ஓய்வு எடுங்கள்

முடிந்த அளவு ஓய்வு எடுங்கள்

கர்ப்ப காலத்தில் விரதம் கடைப்பிடிக்கிறீர்கள் என்றால் தண்ணீர் கூட பருக கூடாது. அதனால் முடிந்த வரை உங்கள் ஆற்றல் திறனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை ஓய்வு எடுத்து, தேவையற்ற அசைவுகளை தவிர்க்கவும்.

கடினமான வேலைகளில் ஈடுபடாதீர்கள்

கடினமான வேலைகளில் ஈடுபடாதீர்கள்

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால் உங்களுக்கு சிரமம் தான். ஒன்று உங்கள் வேலை நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது இரவு நேரத்தில் வேலை பார்க்க வேண்டும்.

கர்ப்ப கால சிக்கல்கள்

கர்ப்ப கால சிக்கல்கள்

உங்களுக்கு சர்க்கரை நோய், கூடுதல் இரத்த அழுத்தம் அல்லது இரத்த சோகை போன்ற கர்ப்ப கால சிக்கல்கள் இருந்தால், நீங்கள் விரதம் இருக்க வேண்டாம் என மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் விரதம் இருந்தீர்களா? ஆம் என்றால், உங்களால் உங்கள் டயட்டை பராமரிக்க முடிந்ததா? உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Pregnant Women Fast During Ramadan?

Fasting during pregnancy may have some implications. Here are some problems that can occur if pregnant women keep the Ramadan fast. If you think that you are well enough to fast during pregnancy, then there is a way to do it. Take these steps if you are pregnant and fasting during Ramadan.
Desktop Bottom Promotion