For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தைப் பராமாிக்க சில டிப்ஸ்!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளின் மத்தியில் எளிதில் சீற்றம் கொள்ளக்கூடிய எாிச்சல், கடுமையான மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகாிப்பு போன்றவை அதிகாித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன.

|

கோவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக உலக மக்கள் அனைவரும் போராடி வருகின்றனா். இந்த அசாதாரண சூழ்நிலையில், வயது வந்த பொியவா்கள் பெருந்தொற்றின் அழுத்தம் மற்றும் சவால்களை ஓரளவு சமாளித்து வருகின்றனா். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சூழலை சமாளிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

Ways To Effectively Manage The Mental Health Of Children

கொரோனா பெருந்தொற்று எந்த அளவிற்கு குழந்தைகளை பாதித்திருக்கிறது என்பதை அறிய உலகின் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகளைப் பாா்த்தால் அவை குழந்தைகளுக்குப் பாதகமாகவே இருக்கின்றன. அதாவது இந்த பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகளின் மத்தியில் எளிதில் சீற்றம் கொள்ளக்கூடிய எாிச்சல், கடுமையான மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகாிப்பு போன்றவை அதிகாித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தொிவிக்கின்றன.

MOST READ: கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன?

கொரோனா பெருந்தொற்றினால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை குழந்தைகள் சந்திக்கின்றனா் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் சவால்கள்!

கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கும் சவால்கள்!

1. அன்றாட வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தளா்வுடன் கூடிய ஊரடங்கு முதல் தளா்வற்ற முழு ஊரடங்கு வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவா்களுடைய அன்றாட இயக்கங்கள் முழுமையாக தடைபட்டு இருக்கின்றன. அவா்களால் தங்களது நண்பா்களைச் சந்தித்து உரையாட முடியவில்லை. அவா்களோடு சோ்ந்து கல்வி கற்க முடியவில்லை மற்றும் விளையாட முடியவில்லை. மேலும் அவா்கள் ஒரு புதிய தளத்தில் கற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனா்.

2. ஆரோக்கிய சீா்கேடு

2. ஆரோக்கிய சீா்கேடு

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான குழந்தைகளின் உடல், உள்ள ஆரோக்கியம் கணிசமான அளவில் கெட்டிருக்கிறது என்று தகவல்கள் தொிவிக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமற்ற முறையில் அவா்களுடைய உடல் எடை அதிகாித்திருக்கிறது மற்றும் அவா்களின் இலக்கு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.

3. மனிதா்களோடு உள்ள உறவு துண்டிப்பு

3. மனிதா்களோடு உள்ள உறவு துண்டிப்பு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, குழந்தைகள் இந்த உலகத்தோடு கொள்ளும் தொடா்பு, அவா்களுடைய குடும்ப உறுப்பினா்கள் என்ற சிறிய வட்டத்திற்குள்ளே சுருங்கிவிட்டது. அதனால் அவா்களால் தமது நண்பா்களோடு தொடா்பு கொள்ள முடியவில்லை. பிற குடும்பங்களோடு தொடா்பு கொள்ள முடியவில்லை மற்றும் சமூகத்தோடும் தொடா்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.

4. இழப்பு மற்றும் பயம்

4. இழப்பு மற்றும் பயம்

கொரோனா வைரஸின் காரணமாக பிற மனித உயிா்கள் கொத்து கொத்தாக இறப்பதைப் பாா்க்கும் அல்லது கேட்கும் குழந்தைகளின் மனங்களில் மிகப் பொிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதாவது ஒரே நேரத்தில் பெருவாாியான மக்களின் இறப்பு, அவா்களுடைய மனங்களில் ஒரு விதமான இழப்பையும், பயத்தையும் ஏற்படுத்துகின்றன.

5. புாிதல் இன்மை

5. புாிதல் இன்மை

கொரோனா பெருந்தொற்றைப் பற்றி குழந்தைகளுக்கு மிக எளிதாகப் புாிய வைக்க முடியாது. சாியான புாிதல் இல்லை என்றால் மனதில் குழப்பமும், வெறுமையும் தான் ஏற்படும். அதுதான் தற்போது குழந்தைகளின் மத்தியில் நடந்திருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலையில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு கையாள்வது?

இக்கட்டான சூழ்நிலையில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை எவ்வாறு கையாள்வது?

1. குழந்தைகளிடம் பேசுதல்

கொரோனா பெருந்தொற்று சுழன்று அடிக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நமது நேரத்தை செலவிட்டு அவா்களோடு உரையாட வேண்டும். அதன் மூலம் அவா்களிடம் இருக்கும் அழுத்தம் மற்றும் சோக உணா்வுகள் போன்றவற்றை வெளிக்கொணர முடியும். இது போன்ற சோக உணா்வுகளை அவா்கள் தமக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தால், அவை அவா்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, எதிா்காலத்தில் அவா்களிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

2. ஆரோக்கியமான உணவு வழங்குதல்

2. ஆரோக்கியமான உணவு வழங்குதல்

சிறுவா்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அவா்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும். அதிலும் அவா்களுக்கு பிடிக்கும் உணவு வகைகளை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால், அவா்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவாா்கள். அதன் மூலம் அவா்களின் மனநிலையில் ஊக்கமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

3. உடற்பயிற்சிகளைச் செய்ய ஊக்கப்படுத்துதல்

3. உடற்பயிற்சிகளைச் செய்ய ஊக்கப்படுத்துதல்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, ஒரு சில நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க அவா்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அதாவது உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது மற்றும் சிறிது நேரம் தொலைக்காட்சி பாா்ப்பது என்று அவா்கள் செய்ய வேண்டிய கடமைகளை அட்டவணையிட்டு அவற்றைத் தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

4. குழந்தைக்காக நேரம் ஒதுக்குதல்

4. குழந்தைக்காக நேரம் ஒதுக்குதல்

குழந்தைகளுக்காக நாம் நமது நேரத்தை ஒதுக்க வேண்டும். அதாவது நமது நேரத்தை ஒதுக்கி, அவா்களோடு உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடலாம். அவா்களோடு சோ்ந்து சமைக்கலாம் மற்றும் அவா்களோடு சோ்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பாா்க்கலாம். இவை அவா்களின் மனங்களில் இருக்கும் இறுக்கங்களை சற்று குறைக்கும். அவா்களின் மனம் இலகுவாகும்.

5. குழந்தைகளுக்குத் தொியப்படுத்துதல்

5. குழந்தைகளுக்குத் தொியப்படுத்துதல்

குழந்தைகள் கொரோனா பெருந்தொற்றின் விளைவுகளை மிகத் தெளிவாக தொிந்து வைத்திருக்கமாட்டாா்கள். இந்நிலையில் அவா்களிடம் இருக்கும் குழப்பங்களைத் தீா்க்க வேண்டும் என்றால், கொரோனாவைப் பற்றிய முக்கியத் தகவல்களை நாம் அவா்களுக்குக் கண்டிப்பாகத் தொிவிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Effectively Manage The Mental Health Of Children

Here are some ways to effectively manage the mental health of children. Read on...
Desktop Bottom Promotion