அறுவை சிகிச்சை செய்ய சென்று பெண்ணின் வயிற்றை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

By Saranraj
Subscribe to Boldsky

இந்த உலகம் அதிசயங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. ஆச்சரியங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அதிர்ச்சியுடன் சேர்ந்த ஆச்சரியம் என்றால் சொல்லவே தேவையில்லை.

Mother

அப்படி ஒரு இன்ப'அதிர்ச்சி' தான் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. வயிற்று வலி தாங்க முடியாமல் கர்ப்பப்பையை நீக்க அறுவை சிகிச்சை செய்ய தொடங்கியபோது உள்ளே 36 வாரங்கள் முழுமையடைந்த 4 கிலோ எடையுடைய ஒரு ஆண்குழந்தை இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அதுதான் நியூசிலாந்தை சேர்ந்த ரெபேக்கா ஓல்ட்ஹாம்-க்கு ஏற்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பபை அகற்றம்

கர்ப்பபை அகற்றம்

தலைமுடி நிபுணராக பணிபுரியும் இருபத்தைந்து வயதான ரெபேக்கா ஓல்ட்ஹாம் தனக்கு ஏற்கனவே ஹேய்லி என்ற மகள் இருப்பதால் மீண்டும் கர்ப்பமாக வேண்டாமென முடிவெடுத்தார். இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக பணியிலிருந்து வீடு திரும்பிய ரெபேக்கா வலி தாங்க முடியாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூன்று ஸ்கேன், இரண்டு இரத்த பரிசோதனை மற்றும் ஆறு கர்ப்பகால பரிசோதனைகள் செய்யப்பட்டது. வயிற்றுவலிக்கான காரணம் புரியாமல் தவித்த மருத்துவர்கள் அவரின் சம்மதத்தோடு ரெபேக்காவின் கர்ப்பபையை அகற்ற முடிவெடுத்தனர்.

மீண்டும் தாய்

மீண்டும் தாய்

அறுவை சிகிச்சை தொடங்கிய சிறிது நேரத்தில் மருத்துவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர், காரணம் ரெபேக்காவின் வயிற்றுவலிக்கு காரணம் அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையாகும். மருத்துவர்கள் உடனடியாக சிசேரியன் செய்ய முடிவெடுத்து ரெபேக்காவின் மயக்கம் தெளிய காத்திருந்தனர். மயக்கம் தெளிந்த ரெபேக்காவிடம் அவர் மீண்டும் தாயாக போகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறிவிட்டு அறுவை சிகிச்சையை தொடர்ந்தனர். தாயாக போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ரெபேக்கா அந்த செய்தியை அறிந்தார். " நல்லவேளை சிறிது நேரத்திற்கு முன்னராவது சொன்னார்களே, மயக்கம் தெளிந்தபின் கையில் குழந்தையை கொடுத்து இதுதான் உங்கள் குழந்தை என்று சொல்வதைவிட இது சிறந்தது " என பின்னாளில் ஒரு பேட்டியில் வேடிக்கையாக தெரிவித்தார்.

குழந்தை இருந்தது எப்படி தெரியாமல் போனது

குழந்தை இருந்தது எப்படி தெரியாமல் போனது

மருத்துவர்கள் ரெபேக்கா போன்ற வழக்குகள் மிக அபூர்வமானவை என்று கூறுகிறார்கள். குழந்தை வயிற்றுக்குள் சாதரண நிலையிலிருந்து மாறுபட்டு இருந்ததால் குழந்தையை கண்டறிய முடியவில்லை என்று கூறினார்கள். சிசேரியன் செய்துகூட குழந்தையை வெளியே எடுப்பது சிரமமாகத்தான் இருந்தது என மருத்துவர்கள் கூறினார்கள். குழந்தை ரெபேக்காவின் விலா எலும்பு அருகே மிகவும் இறுக்கமாக பிணைந்திருந்ததே அவரின் தொடர்ச்சியான வலிக்கு காரணம்என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வீட்டு மருத்துவ பரிசோதனைகள் முதல் மருத்துவமனை ஸ்கேன் வரை எதுவுமே குழந்தையை கண்டறியவில்லை. இதில் மேலும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று அந்த ஒன்பது மாதமும் ரெபேக்காவின் மாதவிடாயில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனபதுதான். சில மருத்துவர்கள் அவர்கள் சரியான ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்திருக்கமாட்டார்கள் அல்லது ஸ்கேன் செய்தவருக்கு அதனை சரியாக பயன்படுத்த தெரியாமல் இருந்திருக்கலாம் என காரணங்கள் கூறுகின்றனர். ஆனால் ரெபேக்கா வழக்கு அறிவியலையும் மீறிய ஆச்சரியங்கள் உலகில் நிறைந்திருக்கிறது என்பதை அனைவரையும் ஒத்துக்கொள்ள செய்திருக்கிறது.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

ரெபேக்காவின் வழக்கு வித்தியாமானதுதான் ஆனால் புதிதல்ல என்று பிரபல மருத்துவர் பேட்ரிக் ஓ பிரையன்தெரிவித்துள்ளார். பிபிசி-க்கு அளித்த பேட்டியில் அவருக்கு தெரிந்த பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் இறுதி மாதம் வரை அவர் கர்ப்பமாக இருந்ததே அவருக்கு தெரியாது எனக் கூறினார். அதிக எடை மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் கர்ப்பத்திற்கான தெளிவான அறிகுறிகளை மறைக்கக்கூடும். குறிப்பாக டீனேஜ் வயதில் உள்ள பெண்கள் பெரும்பாலும் தாங்கள் கர்ப்பமாய் இருப்பதை தாமதமாக உணருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ரெபேக்கா ஓல்ட்ஹாம் தன்னுடைய மகனுக்கு தன் கணவரின் பெயரான ஜேம்ஸ் என்பதையே வைக்க விரும்பினார். இப்பொது ரெபேக்கா பெரிய ஜேம்ஸ், குட்டி ஜேம்ஸ் மற்றும் செல்லமகள் ஹேய்லி உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Doctors got a shock when they try to remove the ovaries they saw a 9 month baby inside

    Mother, Baby, Health, Scan, Caesarean
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more