For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?... இதோ அந்த அறிகுறிகள்...

எல்லாருக்கும் முதல் குழந்தை என்றால் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதிலும் கருத்தரிப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால் அதற்கு பெண்ணின் மனநிலையும் உடல்நிலையும் ந

|

எல்லாருக்கும் முதல் குழந்தை என்றால் போதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதிலும் கருத்தரிப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது. கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால் அதற்கு பெண்ணின் மனநிலையும் உடல்நிலையும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொதுவாக எளிதாக கருத்தரிக்க பெண்களின் ஓவுலேசன் நேரத்தை கணக்கிட சொல்வார்கள். ஒரு கருத்தரிப்பு நிகழ வேண்டும் என்றால் இந்த மாதிரி நிறைய மாற்றங்கள் நமது உடலில் நிகழும்.

இந்த மாற்றங்களை அறிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும். நீங்கள் கருவுற நினைத்தால் அதற்கு உடல் தரும் இந்த அறிகுறிகள் சாதகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓவுலேசன்

ஓவுலேசன்

இந்த ஓவுலேசன் கால கட்டத்தில் கருப்பையில் இருந்து கருமுட்டை வெளிப்பட்டு விந்தணுவுடன் இணையும் போது தான் கரு உருவாகிறது. எனவே நீங்கள் கருவுற நினைக்கும் போது இந்த கால கட்டத்தை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.

உடல் வெப்பநிலை

உடல் வெப்பநிலை

உங்கள் கருவுறும் கால கட்டத்தை அறிய உங்கள் உடல் வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஓவுலேசனிற்கு முந்தைய சில நாட்கள் உடல் வெப்பநிலை குறைந்தும், ஓவுலேசனிற்கு பிந்தைய சில நாட்கள் உடல் வெப்பநிலை அதிகரித்தும் காணப்படும். இதைக் கொண்டு உங்கள் கருவுறுவதற்கான சரியான கால கட்டத்தை அறிந்து கொள்ளலாம்.

சென்ஸ்டிவான மார்பகம்

சென்ஸ்டிவான மார்பகம்

சென்ஸ்டிவான மார்பகம் உங்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறியை காட்டுகிறது. இந்த அறிகுறிகள் ஓவுலேசன் கால கட்டத்தில் நடைபெறும். இந்த நேரத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு மாறுபடுவதால் மார்பகம் சென்ஸ்டிவ் ஆகவும் அதே நேரத்தில் சற்று வீங்கியும் காணப்படும்.

கர்ப்பபை வாய் நிலை

கர்ப்பபை வாய் நிலை

ஓவுலேசன் காலகட்டத்தில் பெண்களின் கர்ப்பபை வாய் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். கர்ப்பப்பை வாய் மென்மையாக இருந்தால் தான் அது சுருங்கி விரிய ஏதுவாக இருக்கும். இந்த சமயத்தில் ஏற்படும் மென்மைத் தன்மை கர்ப்ப காலம் முழுக்க தொடரும். அப்போது தான் பிரசவத்தின் போது குழந்தை கருப்பையில் இருந்து வெளியே வர வசதியாக இருக்கும்.

பிடிப்பு

பிடிப்பு

ஓவுலேசன் நேர்த்தில் அடிவயிற்றில் லேசான பிடிப்புகள் ஏற்படும். இந்த பிடிப்புகள் மாதவிடாய் கால கட்டத்தில் ஏற்படுவதை விட குறைவான வலியை கொண்டு இருக்கும்.

இரத்தம் படுதல்

இரத்தம் படுதல்

நிறைய பெண்களுக்கு இந்த ஓவுலேசன் காலகட்டத்தில் இரத்தம் படுதல் ஏற்படும். அந்த இரத்தம் படுதல் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் கருத்தரிக்க முயன்றால் கருவுறுதல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pregnancy குழந்தை
English summary

Ready For Pregnancy: Signs That Your Body Is Ready For Pregnancy

If you are thinking of conceiving then you should be aware of the timing of your ovulation. some signals, whether your body is ready for pregnancy or not.
Desktop Bottom Promotion