Just In
- 3 hrs ago
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- 4 hrs ago
உங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா?
- 7 hrs ago
உங்க ராசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா? சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...!
- 8 hrs ago
உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...!
Don't Miss
- News
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். இருந்தாலும் இதில் சில கவலைகள் கூட உள்ளன. குழந்தை நோய்வாய்ப்படும் அந்த நேரம் பெற்றோருக்கு மிகவும் சவாலான நேரமாக உள்ளது. மனதளவிலும் உடலளவிலும் பெற்றோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் போது தான் பெற்றோருக்கு உயிரே திரும்பி வரும்.
சில நேரங்களில் குழந்தை நோயை எதிர்த்து போராட அவர்களுக்கு அளிக்கக்கூடிய உணவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. உணவு குழந்தைக்கு வலிமை தருகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றுத் தரும் உணவுகளை குழந்தைக்கு கொடுப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது.

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் நேரம் தாய்ப்பால் அதிகம் கொடுக்கவும்
குழந்தைக்கு நோய் உண்டாவதற்கான பல அறிகுறிகளில் பசி இழப்பு முக்கியமானதாகும். இந்த சூழ்நிலையில் குழந்தைக்கு பிடித்தமான உணவை கொடுக்க முயற்சிக்க வேண்டும். இந்த உணவு ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது பார்முலா பால் கொடுக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே இருப்பதால் குழந்தையின் உடலில் ஆற்றல் அதிகரித்து நோயை எதிர்த்து போராடும் வலிமை உண்டாகிறது.
உங்கள் குழந்தையை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்க அவர்களுக்கு ஒரு சமச்சீரான ஆற்றல் அதிகம் உள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சல் நேரத்தில் உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சில உணவுகள் குறித்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பருப்பு கிச்சடி
நோயை எதிர்த்து போராட தேவையான வலிமையைத் தர உதவும் ஒரு அடிப்படை உணவு இதுவாகும். பருப்பு கிச்சடியில் புரதம் அதிகம் உள்ளது. இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது மற்றும் அதிகமான ஆற்றலைத் தர உதவுகிறது. எந்த ஒரு அதிகமான மசாலா பொருளும் சேர்த்து சுவையான உணவாக தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உணவைத் தயாரிக்க வேண்டாம். எளிய முறையில் செய்தால் போதுமானது. சூடாக இந்த உணவை குழந்தைக்கு கொடுக்கலாம் குழந்தையால் முடிந்த அளவிற்கு இந்த உணவை உட்கொள்ளச் செய்யுங்கள். கட்டாயப்படுத்தி அதிக அளவு உணவு உட்கொள்ள வைக்க வேண்டாம்.

மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு அல்லது பூசணிக்காய்
குழந்தைக்கு 6 மாதம் ஆனது முதல் அவர்கள் உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். ஆறு 6 மாதம் தொடங்கியது முதல் பல்வேறு திட உணவுகளை கொடுக்கத் தொடங்கலாம். விரிசல் அல்லது கோடுகள் இல்லாத சர்க்கரைவள்ளி கிழங்கை தேர்வு செய்து குழந்தைக்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த பூசணிக்காய் கொடுப்பதால் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

சூப்
குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை போதுமான அளவு வழங்குவதற்கு சூப் ஒரு சிறந்த தேர்வு. சூப் செரிமான மண்டலம் எளிதில் செரிக்கக் கூடிய லேசான உணவாகும். சூப் தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் இதில் உடலுக்குத் தேவையான எல்லா மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் மிக அதிகமாக உள்ளன. வடிகட்டிய தண்ணீர் மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். அந்த நீரை மட்டும் வடிகட்டி குழந்தைக்கு கொடுத்தால் போதுமானது. தேவைப்பட்டால் காய்கறிகளை சிறிது சிறிதாக வெட்டி வேகவைத்து இந்த சூப்பில் சேர்த்து கொடுக்கலாம்.

கஞ்சி
ஒரு குக்கரில் உடைத்த கோதுமை அல்லது பருப்பு சேர்த்து கொள்ளவும். கஞ்சி தயாரிக்கும்போது சேர்க்கக் கூடிய பொருளின் அதே அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவைப்பதால் கஞ்சி அடர்த்தியாக இருக்கும். கஞ்சி புரத சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இது குழந்தையின் ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த கஞ்சியில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்ப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காய்கறி மற்றும் பழங்களின் விழுது
காய்ச்சல் நேரத்தில் உட்கொள்ள வேண்டிய இயற்கையான உணவுகளில் முக்கியமானது காய்கறி மற்றும் பழங்களின் விழுது. உங்களுக்கு விருப்பமான காய்கறி அல்லது பழம் கொண்டு ப்யுரீ செய்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள், பட்டாணி, கேரட், போன்றவற்றை ப்யுரி வடிவத்தில் குழந்தைக்கு கொடுப்பது காய்ச்சல் நேரத்தில் மிகவும் ஏற்றதாகும்.

தாய்ப்பால் அல்லது பார்முலா பால்
தாய்ப்பால் அல்லது பார்முலா பால் குழந்தைக்கு ஏற்ற உணவாகும். தாய்ப்பால் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது, காய்ச்சல் நேரத்தில் குழந்தை நீர்ச்சத்துடன் இருப்பதை இது உறுதி செய்கிறது என்பதால் தாய்ப்பால் மிகவும் நல்லது. ஆகவே இதனைக் கொடுப்பதில் எந்த தயக்கமும் வேண்டாம். குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் குறிப்பாக உதவுகிறது.

6 - 8 மாத குழந்தைக்கு பார்லி நீர்
குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து மிக்க தானியங்களில் பார்லியும் ஒன்று. சூப், ஸ்டூ என்று எந்த விதத்திலும் பார்லியை கொடுக்கலாம். பார்லி சூப் அல்லது தானியம் என்று எந்த விதத்திலும் தயாரிக்கப்படலாம் என்பதால் இது குழந்தைக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதும் பார்லியில் உள்ளது.