குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில் எந்த ஒரு தாய்க்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை அதிகம் இருக்காது. ஆனால் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கு எம்மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியே எழும்.

அதிலும் குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்களது கால்கள் மற்றும் பாதங்களை வலிமைப்படுத்தும் உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதற்கு ஒவ்வொரு தாயும் குழந்தைக்கு எந்த உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Foods That Bring Strength To Baby's Feet

குழந்தையின் பாதங்களை வலிமைப்படுத்த பல விஷயங்கள் உதவியாக இருக்கும். அதில் உணவுகளுடன், உடற்பயிற்சிகள், மசாஜ் மற்றும் சரியான காலணிகள் போன்றவைகள் அடங்கும். இருப்பினும் அதில் உணவுகள் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. குழந்தைக்கு போதுமான அளவில் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தாலே, குழந்தை ஆரோக்கியமாக நடக்கும்.

இக்கட்டுரையில் குழந்தையின் வலிமையான கால் மற்றும் பாதங்களுக்கு உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து மருத்துவரிடம் ஆலோசித்து அவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய், தயிர் போன்றவற்றில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் புரோட்டீன்களும் வளமான அளவில் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். அதோடு பாதங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான இதர வைட்டமின்களும் உள்ளன.

காய்கறிகள்

காய்கறிகள்

குழந்தையின் டயட்டில் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம், பாதங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்து வந்தால், குழந்தையின் கால்கள் வலுப்பெறும்.

சோயா பால்

சோயா பால்

சோயா பீன்ஸில் இருந்து கிடைக்கும் சோயா பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஏராளமான அளவில் உள்ளது. அதோடு புரோட்டீன்களும் உள்ளது. மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்ட குழந்தைகளுக்கு சோயா பால் சிறந்த மாற்றாக இருக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளான பாசிப்பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றையும் குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பது நல்லது. மேலும் இதில் புரோட்டீன்களும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தவறாமல் உங்கள் குழந்தையின் டயட்டில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டும் தான் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இதில் கால்சியம் சத்தும் ஏராளமாக உள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்ட குழந்தைகள் சோயா பாலைக் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு ஆரஞ்சு பழத்தை ஜூஸாக எடுத்துக் கொடுங்கள். இந்த வைட்டமினும் கால்சியத்தை உறிஞ்ச உதவியாக இருக்கும்.

ராகி

ராகி

ராகியில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த ராகியை 5 மாத குழந்தையில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் வலுப்பெற்று, குழந்தையின் கால்கள் வலிமைப் பெறும். அதோடு, கைக்குத்தல் அரிசி சாதத்தில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே குழந்தையின் பாதங்கள் வலுப்பெற நினைத்தால், இவற்றைக் கொடுங்கள்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் பாதங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றை நன்கு பொடி செய்து, அவற்றை பாலுடன் அல்லது சூப்புடன் சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.

டோஃபு

டோஃபு

டோஃபு என்பது பன்னீர் போன்றது. இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதிலும் பன்னீரில் இருப்பது போன்று கால்சியம் அதிகம் உள்ளது. இந்த டோஃபுவில் உள்ள கால்சியம், குழந்தையின் பாதங்களை ஆரோக்கியமாக்குவதோடு, கால்களையும் வலிமையாக்கும்.

எள்ளு விதைகள்

எள்ளு விதைகள்

எள்ளு விதைகள் ஒரு சூப்பர் உணவு. இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை 1-1.5 வயது குழந்தைகளுக்கு உண்ணும் உணவுகளில் பொடியாக தூவிக் கொடுத்து வந்தால், குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்கள் வலிமைப் பெறும்.

மீன்

மீன்

குறிப்பிட்ட மீன்களில் கால்சியம், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். நீங்கள் அசைவ பிரியர் என்றால், உங்கள் குழந்தைக்கு சால்மன், மத்தி போன்ற மீன்களைக் கொடுப்பது மிகச்சிறந்தது. இந்த மீன்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு, கால்களின் வலிமையையும் அதிகரிக்கும்.

முட்டை

முட்டை

முட்டை ஒரு சூப்பர் உணவு. இதனை குழந்தையின் அன்றாட டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் உள்ள அத்தியாவசிய புரோட்டீன்கள் மற்றும் வளமான அளவிலான கால்சியம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி, பாதங்கள் மற்றும் கால்களை வலிமைப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Bring Strength To Baby's Feet

Food and nutrition also plays a very important role in the growth of the feet of the baby. Proper nutrition that promotes healthy bones and muscles are of utmost importance in this case. Here are certain foods that you need to opt for!
Subscribe Newsletter