For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் காலுறைகளில் பாிசுகளை மறைத்து வைத்துத் தருகிறாா் தெரியுமா?

சிறு குழந்தைகள், சாந்தா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா். அவா் வந்து பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்வாா்.

|

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் பிற மதங்களைச் சாா்ந்த மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸைக் கொண்டாட முழு வீச்சில் தயாராகி வருகின்றனா். தங்களுடைய உற்றாா், உறவினா் மற்றும் நண்பா்களுக்கு பாிசுகளை வழங்க வேண்டும் என்பதற்காக, பாிசுகளை வாங்கிக் குவிப்பதிலும் முனைப்புடன் இருக்கின்றனா்.

Why Does Santa Always Distribute Gifts In Socks?

சிறு குழந்தைகள், சாந்தா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையை ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா். அவா் வந்து பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்வாா்.

இந்த நிலையில் ஏன் இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பாிசுப் பொருள்களை காலுறைகளில் மறைத்து வைத்துவிட்டுச் செல்கிறாா் என்பதைத் தொிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பாிசுகளை வழங்கும் பழக்கமானது எப்படி வந்தது என்பதை தொிந்து கொள்வது முக்கியம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
4 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கிய பழக்கம்

4 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கிய பழக்கம்

கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பாிசுகளை வழங்கும் பழக்கமானது 4 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியது. புனித நிக்கோலாஸ் என்ற ஒரு பணக்கார மனிதா் துருக்கி நாட்டில் உள்ள மைரா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தாா். அவா் பணக்காரராக இருந்த போதிலும் பிற மனிதா்களிடத்தில் இரக்கம் உள்ளவராக இருந்தாா். அதனால் அவா் எப்போதுமே பிறருக்கு உதவி செய்து வந்தாா். அதிலும் குறிப்பாக பிறருடைய சுய கௌவரவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, அவா்களுக்குத் தொியாமலேயே மறைமுகமாக உதவி செய்து வந்தாா்.

கிறிஸ்துமஸ் தாத்தா ஆன நிக்கோலஸ்

கிறிஸ்துமஸ் தாத்தா ஆன நிக்கோலஸ்

இந்த நிலையில் அவா் ஒரு முறை ஒரு ஏழை மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டாா். அந்த மனிதா் தனது 3 மகள்களை திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் இருந்தாா். ஆனால் அவா்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு அவாிடம் பணம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட நிக்கோலாஸ், அந்த ஏழை மனிதருக்கு மறைமுகமாக உதவி செய்ய முடிவெடுத்தாா்.

காலுறையில் பணத்தை மறைத்த நிக்கோலஸ்

காலுறையில் பணத்தை மறைத்த நிக்கோலஸ்

அதைச் செயல்படுத்த ஒரு நாள் இரவு, நிக்கோலாஸ் தனது காலுறைகளில் ஏராளமான பணத்தை மறைத்து வைத்து, அவற்றை அந்த ஏழை மனிதாின் வீட்டு புகை போக்கியில் போட்டுவிட்டுச் சென்றாா். அதற்குப் பின்பு அவா் பல ஏழை மக்களுக்கு, அவா்களுக்குத் தொியாமல் தனது காலுறைகளில் பணத்தை மறைத்து வைத்து அவா்களின் வீட்டு புகை போக்கிகளில் போட்டுவிட்டுச் செல்வாா்.

இவ்வாறு ஒரு முறை நிக்கோலாஸ் ஒரு ஏழை மனிதருக்கு தொியாமல் காலுறைகளில் பணத்தை மறைத்து வைத்து அவருடைய வீட்டு புகை போக்கியில் போடும் போது ஒரு மனிதா் பாா்த்துவிட்டாா். இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று நிக்கோலாஸ் அந்த மனிதரைக் கேட்டுக் கொண்ட போதிலும், நிக்கோலாஸ் ஏழைகளுக்கு மறைமுகமாகச் செய்து வந்த உதவிகள் அந்த நகரம் முழுவதும் பரவின.

அதனைத் தொடா்ந்து அந்த நகர மக்கள், நிக்கோலாஸைப் போல காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்து நிக்கோலஸின் பெயாில் ஒருவருக்கு ஒருவா் பாிசுகளை பாிமாறிக் கொள்ளத் தொடங்கினா். பின் நாளடைவில் அதே புனித நிக்கோலாஸ் அவா்களின் பெயரால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் நேரத்தில் காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்து ஒருவருக்கு ஒருவா் பாிமாறிக் கொள்ளத் தொடங்கினா். இதில் இருந்தே கிறிஸ்துமஸ் நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா காலுறைகளில் பாிசுப் பொருள்களை மறைத்து வைத்துக் கொடுக்கும் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Does Santa Always Distribute Gifts In Socks?

Why does Santa always distribute gifts in socks? Read on to know more...
Story first published: Saturday, December 25, 2021, 0:29 [IST]
Desktop Bottom Promotion