Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம்
Christmas 2023: கிறிஸ்துமஸ் பண்டிகை ஏன் 'ப்ளம் கேக்' வெட்டி கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?
Christmas 2023: ஒவ்வொரு பண்டிகையின் பெயரைக் கூறும் போதும் நமக்கு ஒவ்வொன்று நினைவிற்கு வரும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கேக் மற்றும் சாண்டா கிளாஸ் தான். சொல்லப்போனால் கிறிஸ்துமஸ் கேக் இல்லாமல் அந்த பண்டிகை முழுமையடையாது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அழகாக வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் போன்றவற்றால் அலங்கரிக்க தயாராகிக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் நாளாகும்.

இந்நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் கேக் செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் அந்த கேக்குகளை கடைகளில் வாங்க, எந்த கடை சிறந்ததாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
சரி, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஏன் கேக் வெட்டப்படுகிறது என்று உங்களுக்கு என்றாவது மனதில் கேள்வி எழுந்துள்ளதா? கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும், கேக்கிற்கும் இடையே எப்படி தொடர்பு வந்தது என்று தெரியுமா? இல்லாவிட்டால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். கீழே கிறிஸ்துமஸ் மற்றும் கேக்கிற்கு இடையே உள்ள உறவு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் கேக்கிற்கு இடையேயான உறவு
கிறிஸ்துமஸிற்கும், கேக்கிற்கும் இடையேயான உறவு மிகவும் பழைமையானது. பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் இரண்டு கிறிஸ்தவ பண்டிகை நாட்களில் இருந்து பெறப்பட்டது: பன்னிரண்டாவது இரவு மற்றும் ஈஸ்டர். ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் கேக் ஒரு கிறிஸ்துமஸ் கஞ்சியாக இங்கிலாந்தில் தோன்றியது.
அதுவும் அந்த கிறிஸ்துமஸ் கஞ்சி சாப்பிடும் பழக்கம் இடைக்கால ஆங்கில பாரம்பரியத்தில் உள்ளது. இந்த கஞ்சியானது மாட்டிறைச்சி, பிரட் துண்டுகள், கொடிமுந்திரி, உலர் திராட்சைகள், கரண்ட்ஸ், எலுமிச்சை, மசாலாப் பொருட்கள், சர்க்கரை மற்றும் ஒயின் ஆகியவற்றைக் கொண்டு விசித்திரமாக தயாரிக்கப்பட்டது. இந்த கஞ்சியானது ஒரு ஜெல்லி வடிவத்தில் உட்கொள்ளப்பட்டு வந்தது.
காலப்போக்கில், வழக்கமாக செய்யும் கிறிஸ்துமஸ் கஞ்சியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களின் தேர்வு மாறியது. அதன் பின் இங்கிலாந்தில் உள்ள மக்கள், அந்த கிறிஸ்துமஸ் கஞ்சியில் மாவு, முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை சேர்க்கத் தொடங்கினர். அப்போது அதில் இருந்து இறைச்சி நீக்கப்பட்டு ஒரு கேக்காக மாறியது.
கிறிஸ்துமஸ் கேக்கை, கிறிஸ்துமஸ் பிளம் கேக் என்று அழைப்பார்கள். இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்த கேக் தயாரிப்பில் ப்ளம்ஸ் சேர்க்கப்படாவிட்டாலும், இடைக்கால ஆங்கிலத்தில் கரண்ட்ஸ் மற்றும் உலர்திராட்சைகள் 'ப்ளம்ஸ்' என்று குறிப்பிடப்படுவதால், இந்த பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இப்படி தான் கிறிஸ்துமஸ் கேக் வந்தது. அதன் பின் காலப்போக்கில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு, தற்போது பலவிதமான கேக்குகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போட்டு வெட்டி கொண்டாடப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications