Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2 மணிநேரத்தில் சுவையான பிரிட்டிஷ் ப்ளம் கேக்கை செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Christmas Special British Plum Cake Recipe: கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டது. பலரும் தங்கள் வீடுகளை அழகான விளக்குகளால் அலங்கரித்து, வீட்டில் கேக்குகளை தயாரிக்க தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கேக் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ளம் கேக்கை செய்ய ஆசைப்படுகிறீர்களா?
அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக பிரிட்டிஷ் ப்ளம் கேக்கை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிட்டிஷ் ப்ளம் கேக் செய்வது மிகவும் சுலபம்.

அதுவும் 2 மணிநேரத்திலேயே ஈஸியான முறையில் பிரிட்டிஷ் ப்ளம் கேக்கை செய்யலாம். இந்த கிறிஸ்துமஸிற்கு இந்த பிரிட்டிஸ் ப்ளம் கேக்கை உங்கள் வீட்டில் முயற்சி செய்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ட்ரை ஃப்ரூட் மிக்சருக்கு...
* உலர் திராட்சை - 1 1/2 கப்
* பேரிச்சம் பழம் - 5 (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த கொடி முந்திரி - 6 (பொடியாக நறுக்கியது)
* டூட்டி ப்ரூட்டி - 1/4 கப்
* ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
கேரமலுக்கு...
* சர்க்கரை - 1/4 கப்
* தண்ணீர் - 1/4 கப்
ட்ரை மிக்சருக்கு..
* மைதா - 1 1/2 கப்
* பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
* பட்டை தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு தூள் - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
ப்ளம் கேக் மாவிற்கு..
* உப்புள்ள வெண்ணெய் - 100 கிராம்
* சர்க்கரை - 1/2 கப்
* வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
* துருவிய ஆரஞ்சு தோல் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* முந்திரி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு 8 இன்ச் பேக்கிங் பேனை எடுத்து, பாரச்மெண்ட் பேப்பரை அதனுள்
வைத்து, அதன் மேல் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் உலர் திராட்சை, உலர் கொடி முந்திரி,
டூட்டி ப்ரூட்டி, பேரிச்சம் பழம் போன்றவற்றை எடுத்து, அத்துடன் ஆரஞ்சு
ஜூஸை ஊற்றி, அடுப்பில் வைத்து, உலர் பழங்கள் மென்மையாகும் வரை வேக
வைக்க வேண்டும்.
* உலர் பழங்கள் நன்கு மென்மையானதும், அடுப்பை அணைத்துவிட்டு, அவற்றை
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து கேரமல்லை தயாரிக்க வேண்டும். கேரமல் கேக்கிற்கு நல்ல
ப்ளேவரையும், நிறத்தையும் தரும். அதற்கு ஒரு பேனில் சர்க்கரையை
சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். அப்படி சூடேற்றும் போது,
சர்க்கரையின் நிறமானது அடர் நிறத்தில் மாறத் தொடங்கும் சமயத்தில் 1/4
கப் நீரை ஊற்றி தொடர்ந்து கிளறி விட வேண்டும். கேரமல் நீர் போன்ற
பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பட்டைத் தூள்,
சுக்குத் தூள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மற்றொரு பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ்,
ஆரஞ்சு தோல் ஆகியவற்றை சேர்த்து நன்கு க்ரீமியாக அடித்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு ஒருசேர பீட்டர்
கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மைதா மாவு கலவை, உலர் பழங்களின் கலவை மற்றும் குளிர
வைத்துள்ள கேரமல் சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஒருசேர கெட்டியான
மாவாக கலந்து காள்ள வேண்டும்.
* பின்னர் கேக் பேனில் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ப்ரீ ஹீட்
செய்யப்பட்டுள்ள ஓவனில் வைத்து 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை
பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். பேனில் இருந்து கேக்கை எடுப்பதற்கு
முன் கேக் தயாராகி விட்டதா என்று, ஒரு டூத் பிக் கொண்டு குத்தி
பார்க்க வேண்டும். டூத் பிக்கில் மாவு எதுவும் ஒட்டாமல் இருந்தால்,
கேக் தயார் என்று அர்த்தம்.
* ஓவனில் இருந்து கேக்கை வெளியே எடுத்ததும் உடனே கவிழ்த்துவிடாமல்,
அறைவெப்பநிலைக்கு வரும் வரை குளிர வைத்து, பின் அதை கவிழ்த்தால்,
சுவையான பிரிட்டிஷ் ப்ளம் கேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications