Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றன. அதுவும் இந்த மரத்தை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகையாகும். மேலும் இது உலகளவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகையும் கூட. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டில் முன் நட்சத்திரங்களை தொங்க விடுவதோடு, வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து, பலவண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைப்பது மிகவும் மங்களரமானது மற்றும் இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கச் செய்கிறது. இதனால் வீட்டில் சந்தோஷமும், அமைதியும் நிலைத்திருக்கும். அதே வேளையில் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைப்பதால், அந்த வீட்டின் வாஸ்து தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் கிறிஸ்துமல் மரம் ஒற்றுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இதை வீட்டில் வைத்து குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அலங்கரிக்கும் போது, குடும்ப உறுப்பினர்களிடையே எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

எந்த திசையில் வைக்க வேண்டும்?
கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றன. அதுவும் இந்த மரத்தை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். முக்கியமாக கிறிஸ்துமஸ் மரம் முக்கோண வடிவில் இருக்க வேண்டும். வாஸ்துப்படி முக்கோண வடிவம் நெருப்பின் வடிவமாக கருதப்படுகிறது.

எங்கு வைக்கக்கூடாது?
ஃபெங் சூயி படி, கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டின் தெற்கு பகுதியில் வைக்கக்கூடாது. ஏனெனில் வீட்டில் தெற்கு பகுதியில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தால், வீட்டில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் தான் கிடைக்கும்.

மெழுகுவர்த்தி ஏற்றவும்
கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைத்தால், அந்த மரத்தைச் சுற்றி மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்படி மெழுகுவர்த்தி ஏற்றும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதுவும் வண்ணமணமான மற்றும் நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஏற்றினால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.

வேறு எந்த பொருட்களால் அலங்கரிக்க வேண்டும்?
கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள் மற்றும் ரிப்பன்களால் அலங்கரிக்கப்படுவதோடு, மணிகளும் ஆங்காங்கு தொங்கவிடப்படுவதுண்டு. ஃபெங் சூயி படி, மணியில் இருந்து வரும் ஒலியானது நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். அப்படிப்பட்ட மணியை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டும் போது, வீட்டினுள் அது எழுப்பும் ஒலியால், வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். இது தவிர கிறிஸ்துமஸ் மரத்தில் சிவப்பு ரிப்பனில் 2 நாணயங்களைக் கட்டி தொங்கவிட்டால், அந்த வீட்டில் பணப்பிரச்சனை எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications