Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் - ரம் ஃபுரூட் கேக் ரெசிபி
நீங்கள் இந்த ஆண்டு உங்கள் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கேக் செய்ய விரும்பினால், ரம் ஃபுரூட் கேக் செய்யுங்கள். இந்த ஃபுரூட் கேக் செய்வது மிகவும் சுலபம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள். சிலர் தங்களின் வீடுகளிலேயே கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கேக் செய்ய விரும்புவார்கள். நீங்கள் இந்த ஆண்டு உங்கள் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கேக் செய்ய விரும்பினால், ரம் ஃபுரூட் கேக் செய்யுங்கள். இந்த ஃபுரூட் கேக் செய்வது மிகவும் சுலபம். இந்த கேக்கின் ஸ்பெஷலே உலர் பழங்கள், நட்ஸ் மற்றும் ரம் தான். மற்றபடி எப்போதும் செய்வது போன்ற கேக்கின் செய்முறை தான் இருக்கும்.

உங்களுக்கு ரம் ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரம் ஃபுரூட் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 கப்
* சர்க்கரை - 1 1/4 கப்
* வெண்ணெய் - 250 கிராம்
* முட்டை - 5
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
* பட்டைத் தூள் - 1 டீஸ்பூன்
* கிராம்பு தூள் - 1 சிட்டிகை
* ஜாதிக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேராமலுக்கு...
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
ஊற வைப்பதற்கு...
* பேரிச்சம் பழம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த ஆப்ரிகாட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த கொடிமுந்திரி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* செர்ரி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உலர் திராட்சை - 1 கப்
* நட்ஸ் - 1 கப் (முந்திரி, பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா பொடியாக நறுக்கியது)
* டார்க் ரம் - 1 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கேக் செய்வதற்கு முந்தைய தினம் ஒரு பௌலில் நறுக்கிய உலர்பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ரம்மை ஊற்றி நன்கு கலந்து 1 நாள் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு 2 பேக்கிங் பேனை எடுத்து, அதில் பார்ச்மெண்ட் பேப்பரை வைத்து விரித்து, வெண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சர்க்கரையை உருக்க வேண்டும். சர்க்கரையானது உருகி அடர் நிறத்தில் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மெதுவாக நீரை ஊற்றி சர்க்கரையை நன்கு கரைய வைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், கேராமலை குளிர வைக்க வேண்டும்.
* பின் ஒரு பௌலில் ஊற வைத்த உலர் பழங்களை எடுத்துக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் மைதாவை சேர்த்து கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சல்லடையில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சுக்கு பொடி, பட்டை பொடி, கிராம்பு பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வெண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து, எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தி நன்கு க்ரீமியாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் முதலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அடித்துக் கொண்டு, பின் மீதமுள்ள 3 முட்டைகளை உடைத்து ஊற்றி க்ரீமியாக அடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் சலித்து வைத்துள்ள பாதி மைதாவை சேர்த்து, பாதி கேரமலை ஊற்றி நன்கு மென்மையாக கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மீதமுள்ள மைதா மாவை சேர்த்து, எஞ்சிய கேரமலை ஊற்றி மீண்டும் நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் உலர்பழங்களின் கலவையை சேர்த்து நன்கு கிளறி, பேக்கிங் பேனில் ஊற்றி பரப்பி, ஓவனில் 40-45 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* கேக் குளிர்ந்ததும், அதை திருப்பிப் போட்டு, பேக்கிங் பேனை அகற்றிவிட்டு, அதில் உள்ள பார்ச்மண்ட் பேப்பரை உரித்து நீக்கிவிட்டு துண்டுகளாக்கினால், சுவையான ரம் ஃபுரூட் கேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
