Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Christmas 2023: கிறிஸ்துமஸை வித்தியாசமான முறையில் கொண்டாடும் டாப் 10 நாடுகள்!
Christmas 2023: கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை ஆகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த பண்டிகையை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகைகளில் சுமார் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கின்றனர். இந்த கிறிஸ்துமஸ் மரபு முறைகளில் சில வித்தியாசமான மரபுகளையும் அவர்கள் கடைபிடிக்க தவறுவதில்லை.
1970 களில் இருந்து ஜப்பான் முழுவதும் உள்ள KFC உணவகங்கள் கிறிஸ்துமஸ் தாத்தா சிலைகளை அலங்கரிக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் கிறிஸ்துமஸை ஒட்டி KFC உணவகங்களில் தஞ்சம் புகுகின்றனர். இப்படி கிறிஸ்துமஸை ஒட்டி பல வித்தியாசமான நடைமுறைகள் நாட்டில் உள்ளது அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

கிறிஸ்துமஸை ஒட்டியுள்ள பல வித்தியாசமான நடைமுறைகள்:
1. கிராம்பஸ்: ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மக்கள் கிராம்பஸ் போன்ற பயமுறுத்தும் வேடங்களை அணிகின்றனர். பேய்த்தனமான முகமூடிகளுடன் பெரிய கொம்புகளை வைத்துக் கொண்டு மிருகம் மாதிரி செயல்படுகின்றன. ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா முழுவதும் டிசம்பர் 5 ஆம் தேதி இந்த கிராம்பஸ் ஊர்வலம் நடைபெறும். பல நகரங்களில் இந்த திருவிழாக்கள் ' கிராம்புஸ்நாச்ட்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. கட்டலோனியா மரபுகள்
கட்டலோனியா மரபுகளில் சில விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. மரத்தால் ஆன நிறைய சிறிய வடிவ சிலைகள் வடிக்கப்படுகிறது. சிறிய மலம் கழிக்கும் சிலை, கால்பந்து வீரர்கள் போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. இந்த மரக்கட்டை பொம்மைகளுக்கு ஒவ்வொரு நாளும் பழங்கள், கொட்டைகள் இனிப்புகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
3. தேவாலயத்திற்குள் ஸ்கேட்டிங் செய்தல்
வெனிசுலாவின் தலைநகரான கராகஸில், பண்டிகைக் காலம் முழுவதும் மக்கள் தேவாலயத்திற்குள் ஸ்கேட்டிங் செய்து கொண்டே செல்கின்றனர். இதற்காக டிசம்பர் 16 ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் ஈவ் அன்று காலை நேரங்களில் சாலைகள் மூடப்படும்.
4. வறுத்த KFC சிக்கன்
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜப்பானியர்கள் KFC உணவகங்களுக்கு செல்கின்றனர். எனவே டிசம்பர் 25 KFC உணவகங்களுக்கு லாபகரமான நாளாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது குடும்பமாக சென்று ஃடீப் ப்ரைடு சிக்கன் சாப்பிட்டு வருவார்கள்.
5. இறந்தவர்களை நினைவு கூர்தல் : போர்ச்சுகல்
போர்ச்சுகலில் கிறிஸ்துமஸின் போது இறந்த உறவினர்களுக்காக குடும்பங்கள் டைனிங் டேபிளில் கூடுதல் இடங்களை இடுகின்றன. இதன் மூலம் இறந்த முன்னோர்களை அவர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த நடைமுறையானது கன்சோடா என்று அழைக்கப்படுகிறது. உப்பிட்ட மீன், உருளைக்கிழங்கு மற்றும் பிராந்திய இனிப்பு வகை உணவுகளை உண்பது குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என நம்புகின்றனர். ஒரு நாள் விரதத்திற்கு பிறகு இது பாரம்பரியமாக நடைபெறுகிறது.
6. காலணிகளை எறிதல்
இது செக் குடியரசு நடத்தும் பழைய தனித்துவமான பாரம்பரிய முறையாகும். இந்த நடைமுறையின் போது கல்யாணம் ஆகாத பெண்கள் கதவுகளுக்கு முன் முதுகை காட்டி நிற்கிறார்கள். இப்பொழுது காலணிகளை தோள்களில் தூக்கி எறிவார்கள். ஒரு காலணி அதன் கால் விரல் கதவை நோக்கிச் சென்றால், அந்தப் பெண்ணுக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
7. துடைப்பங்களை மறைத்தல்
நார்வேயில் கிறிஸ்துமஸ் ஈவ் என்பது தீய ஆவிகள் மற்றும் மந்திரவாதிகளின் வருகையுடன் ஒத்துப் போகிறது. எனவே அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உறங்கச் செல்வதற்கு முன் தங்களது வீட்டில் உள்ள விளக்குமாறு மற்றும் துடைப்பான்கள் அனைத்தையும் மறைத்து வைக்கின்றனர்.
8. மரங்களில் சிலந்தி வலைகள்
உக்ரேனியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மரங்கள் பாரம்பரிய போலி சிலந்தி மற்றும் வலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிலந்தி வலைகளை பார்ப்பது அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது.
9. இரவு உணவிற்கு திமிங்கல தோல் சாப்பாடு
கிரீன்லாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டாக் பச்சைத் திமிங்கலத்தோலுடன் ப்ளப்பர் ஒன்று தயார் செய்யப்படுகிறது. மக்கள் இதை விரும்பி சாப்பிட்டு மகிழ்கின்றனர். மற்றொன்று கிவியாக் அதாவது ஆக் (ஒரு சிறிய பறவை) பல மாதங்கள் புதைக்கப்பட்டு பின்னர் நன்றாக சிதைந்தவுடன் உண்ணப்படுகிறது.
10. மா மரங்கள் அலங்கரிப்பு
இந்திய மக்கள்தொகையில் சுமார் 2.3 சதவீதம் பேர் மட்டுமே கிறிஸ்தவர்கள். இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் பைன் மரங்கள் அல்லது தேவதாரு மரங்கள் இல்லாத நிலையில் வாழை மரங்கள் மற்றும் மா மரங்கள் அலங்கரிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications