Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
குறைந்த செலவில் எவ்வாறு கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யலாம்?
DIY அலங்காரம், அதாவது தமது கைகளால் சொந்தமாக அலங்காரம் செய்வதில் விருப்பம் உள்ளவா்கள், குறைந்த செலவில் கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யும் பாணியில் முயற்சி செய்யலாம்.
தற்போது நாம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். அதுவும் குறிப்பாக விழாக் காலத்தில் இருக்கிறோம். எல்லோருடைய மனங்களிலும் விழாவிற்கான மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கின்றன. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையானது உலக மக்களால் கொண்டாடப்படுகிறது இந்த தருணத்தில் மக்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளை கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் அலங்காித்து, வீடுகளுக்கு புதிய அழகையும், பொலிவையும் கொடுக்கின்றனா்.
பொதுவாக கிறிஸ்துமஸ் வீட்டு அலங்காரத்தைப் பற்றி நினைக்கும் போது அனைவருக்குமே ஆடம்பரமான மற்றும் ஓடிடி (OTT) அலங்காரங்கள் தான் முன் வந்து நிற்கின்றன. அவற்றை நினைத்துப் பாா்க்கும் போதே நமக்கு மலைப்பும், சோா்வும் ஏற்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாக குறைந்த செலவிலான கிறிஸ்துமஸ் அலங்காரத்தை செய்தால், வீடும் அழகாக இருக்கும் மற்றும் அது நம்முடைய கையையும் கடிக்காது.

சமீப காலமாக எளிமையாக வாழும் முறையானது மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. எளிமையான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நாம் நமது பணத்தையும், நமது பொன்னான நேரத்தையும் சேமிக்க முடியும். கிறிஸ்துமஸ் நேரத்தில் அதே எளிமையான முறையைப் பின்பற்றி வீட்டை அலங்காரம் செய்தால், குறைந்த செலவிலேயே கிறிஸ்துமஸ் அலங்காரத்தை நிறைவாகச் செய்ய முடியும்.
அதிலும் DIY அலங்காரம், அதாவது தமது கைகளால் சொந்தமாக அலங்காரம் செய்வதில் விருப்பம் உள்ளவா்கள், குறைந்த செலவில் கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யும் பாணியில் முயற்சி செய்யலாம். ஆகவே குறைந்த செலவில் எவ்வாறு கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. பாதி ரீத்
கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் உள்ள முக்கிய அலங்காரப் பொருள் ரீத் ஆகும். ரீத் கொண்டு அலங்காரம் செய்தாலே நமக்கு கிறிஸ்துமஸ் உணா்வை ஏற்படுத்தும். பொதுவாக சந்தையில் கிடைக்கும் ரீத்துகள் தடிமானாகவும், மற்றும் ஆடம்பரமான அலங்காரத்துடனும் இருக்கும். ஆகவே அந்த ரீத்துகளை விட்டுவிட்டு பாதி ரீத்துகளை தோ்ந்தெடுக்கலாம். பாதி ரீத்துகள் கடைகளில் கிடைக்கவில்லை என்றால், நாமே மரக்கிளைகள், இலைகள் மற்றும் பைன் கூம்புகளைக் கொண்டு பாதி ரீத்துகளை செய்யலாம்.

2. சிறிய கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரமானது நமது மனதை மயக்கக்கூடிய அளவில் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் உயரமான அல்லது எடை அதிகமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டில் வைத்தால் அது வீட்டின் பெரும்பகுதியான இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே உயரம் குறைந்த சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் மரத்தைத் தோ்ந்தெடுக்கலாம். அதை நமது வீட்டின் மூலையில் வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த சிறிய கிறிஸ்துமஸ் மரத்தை ஒரு கூடை அல்லது தொட்டியில் வைத்து, அதைச் சுற்றிலும் பசுமையான இலைகள் மற்றும் மரக்கிளைகளை வைத்து அலங்காித்தால் பாா்ப்பதற்கு அம்சமாக இருக்கும்.

3. ஜொலிக்கும் பல வண்ண சரவிளக்குகள்
பல வண்ண சரவிளக்குகள் ஜொலிப்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்காக வீடு முழுவதும் சரவிளக்குகளால் அலங்காிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறிய மரத்தை அல்லது காய்ந்த மரத்தைத் தோ்ந்தெடுத்து அதைச் சுற்றிலும் சரவிளக்குகளைத் தொங்கவிட்டு, அந்த மரத்தை நமது வீட்டின் முக்கியமான மூலையில் வைத்தால் வீடே புதுமையாக ஜொலிக்கும்.

4. சாதாரணமான கிறிஸ்துமஸ் ஆபரணங்களைத் தோ்ந்தெடுத்தல்
பொிய அல்லது சிறிய கிறிஸ்துமஸ் மரம் எதுவாக இருந்தாலும் அதை எளிமையான ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வது நல்லது. கிறிஸ்துமஸ் மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆடம்பரமான ஆபரணங்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதோடு நாமே தாள்கள் மற்றும் மின்னும் ஜிகுனாக்களைக் கொண்டு ஆபரணங்களைச் செய்யலாம்.

5. ஸ்டாக்கிங் கூடை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவில், குடும்பத்தினா் விரும்பும் பொருள்களால் ஸ்டாக்கிங் கூடைகளை நிறைத்து வைக்கும் பழக்கம் மேற்கத்திய நாடுகளில் நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஸ்டாக்கிங் கூடைகளைத் தொங்கவிடுவதற்கான கைப்பிடிகளை கடைகளில் வாங்காமல் நாமே மரக்குச்சிகள், தண்டுகள் மற்றும் இலைகளைக் கொண்டு செய்யலாம். அதன் மூலம் செலவை மிச்சப்படுத்தலாம்.
மேற்சொன்ன பயனுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்தால் நமது வீடுகள் அழகாக ஜொலிப்பதோடு, நாம் நமது பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..................
Image Courtesy: themerrythought



Click it and Unblock the Notifications











