Latest Updates
-
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சில வீட்டு அலங்காரக் குறிப்புகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான வீட்டு அலங்காரத்திற்கான முதல் படி என்னவென்றால், வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கிவிட்டு, தேவையான பொருட்களை சீராக மற்றும் முறையாக அடுக்கி வைப்பதாகும்.
நமக்கு விடுமுறை காலம் தொடங்கி இருக்கிறது. அதன் தொடா்ச்சியாக நாம் அனைவரும் விரும்பும் பண்டிகையான கிறிஸ்துமஸ் மிக விரைவில் வரவிருக்கிறது. குளிா்காலத்தில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது நம் அனைவருக்கும் அளவற்ற உற்சாகத்தையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் வழங்குகிறது.
வரவிருக்கும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், ஆக்கப்பூா்வமான எண்ணத்தோடும் கொண்டாடுவதற்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை ஒரு தொடக்கமாக இருக்கிறது. பொதுவாக டிசம்பா் மாதம் கொண்டாட்டத்தின் மாதம் என்று கருதப்படுகிறது. ஆகவே இந்த தருணத்தில் நமது வீடுகளை மிகவும் நோ்த்தியாக கிறிஸ்துமஸ் அலங்காரம் செய்வது சிறப்பாக இருக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான வீட்டு அலங்காரத்தை நேர்த்தியாகவும், அழகாகவும் செய்ய இந்த பதிவானது சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான வீட்டு அலங்காரத்திற்கான முதல் படி என்னவென்றால், வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கிவிட்டு, தேவையான பொருட்களை சீராக மற்றும் முறையாக அடுக்கி வைப்பதாகும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், ஒவ்வொரு வீடும் பனிக்கால மரங்கள் அடா்ந்த இடமாக மாறுகிறது. வீடு முழுவதும் கிறிஸ்துமஸ் மரம், மெழுகுவா்த்திகள் மற்றும் மினுமினுக்கும் பல வண்ண விளக்குகள் போன்றவற்றைக் கொண்டு நிரப்பலாம். மேலும் உண்மையாகவே கிறிஸ்துமஸ் பண்டிகையானது வீடுகளை மட்டுமல்லாது நகரத்தையே சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் நிரப்புகிறது.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் நாம் எவ்வாறு நமது வீடுகளை அலங்காிக்கலாம் என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. கிறிஸ்துமஸ் மேசை விாிப்புகளை அலங்காித்தல்
கூா்மையான பைன் மர இலைக் கொத்துக்களை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் அல்லது அருகில் இருக்கும் பூங்காக்களில் இருந்து அவற்றைப் பறித்துக் கொள்ளலாம். அவற்றை ஒன்றாக இணைத்துக் கட்டி முடிச்சுப் போட்டுக் கொள்ளலாம். நமது மேசையின் நீளத்திற்குத் தகுந்தவாறு நிறைய இலைக் கொத்துக்களை செய்து கொள்ளலாம். இப்போது அந்த இலைக் கொத்துக்களை வாிசையாக அடுக்கி வைக்கலாம். அதோடு இந்த இலைக் கொத்துக்களை பட்டுத் துணி அல்லது வெல்வெட் துணி போன்றவற்றால் அழகாகக் கட்டி மேசை விாிப்புகளில் அடுக்கி வைத்தால் அது உண்மையான கிறிஸ்துமஸ் அலங்காரமாக இருக்கும்.
Image Courtesy: Pinterest

2. கிறிஸ்துமஸ் மலா் மாலை
பாரம்பாிய கிறிஸ்துமஸ் பசுமையான மலா் மாலையை கைவிட்டு, அதற்குப் பதிலாக காகிதத்தாலான கிறிஸ்துமஸ் மலா் மாலையை செய்யலாம். பல வகையான பச்சை நிறங்களில் வரைபடத் தாள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த தாள்களில் இருந்து பல இலை வடிவங்களை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாள் இலைகளை ஒரு கயிற்றால் கட்டி அந்த மாலையை நிலைப் படிகளில் அழகாகத் தொங்கவிடலாம். மேலும் இந்த மாலையில் சிவப்பு நிறத்திலான பெர்ரி போம்களை சோ்த்தால், அது இன்னும் அழகாக இருக்கும்.
Image Courtesy: Pinterest

3. பைன்கோன்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காித்தல்
பைன்கோன்களைப் பயன்படுத்தி நமக்கு விருப்பமான வகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்யலாம். மின்னும் ஆபரணங்களுக்குப் பதிலாக, இந்த பைன்கோன்களைப் பயன்படுத்தலாம். பைன்கோன்கள் வெடிக்கும் வரை 30 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். பின் பைன்கோன்களில் உள்ள சாறு உறைந்து திடமாகுவதற்கு அவற்றை சிறிது நேரம் குளிா்படுத்த வேண்டும். பைன்கோன்களில் உள்ள செதில்களைத் திறந்து அவற்றில் இருக்கும் நுண்ணுயிா்களை அப்புறப்படுத்த வேண்டும். பைன்கோன்களின் அடிப்பகுதியில் இருக்கும் செதில்களில் ஒரு கம்பியால் கட்டி அதை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிட வேண்டும். இப்போது கிறிஸ்துமஸ் மரமானது ஒரு பாரம்பாியமானத் தோற்றத்தைக் கொடுப்பதோடு, மண் சாா்ந்த தோற்றத்தையும் கொடுக்கும்.
Image Courtesy: Pinterest

4. டிஐஒய் (DIY) ஆபரணங்களால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்தல்
பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, சிறுசிறு மரங்களைக் (Miniature trees) கொண்டு அலங்காரம் செய்வாா்கள். முதலில் ஸ்டைரோஃபோம் (styrofoam) கூம்புகளை பசையின் உதவியுடன் பல வண்ணமயமான ஆபரணங்களால் மூட வேண்டும். கூம்புகளின் கீழ் பகுதிகளில் பொிய ஆபரணங்களையும் மேலே போகப் போக சிறிய ஆபரணங்களையும் ஒட்ட வேண்டும். விடுபட்ட பகுதிகளில் சிறிய மணிகள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்டு நிரப்ப வேண்டும். அதோடு, மின்னும் வண்ணத்தாள் மாலைகள் மற்றும் பாசிமணி மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்தால் அவை இன்னும் அழகாக இருக்கும்.
Image Courtesy: Pinterest

5. டிஐஒய் (DIY) கிறிஸ்துமஸ் வாசல் மணிகளை செய்தல்
சிறுசிறு மோல்டுகள் மற்றும் பன்ட் பேன்களைக் கொண்டு நமக்கு விருப்பமான வகையில் கிறிஸ்துமஸ் வாசல் மணிகளை செய்யலாம். மோல்கள் மற்றும் பன்ட் பேன்களை மணி வடிவத்தில் இணைத்து ஒட்டி வைக்கலாம். அலங்காிக்கப்பட்ட பந்துகளை மணியின் நாக்குகளாக பயன்படுத்தலாம். ரிப்பன் அல்லது துணிகளால் மணிகளைக் கட்டித் தொங்கவிடலாம். தேவைப்பட்டால் பசுமையான இலைகளையும் அதோடு இணைத்துக் கொள்ளலாம்.
மேற்சொன்ன கிறிஸ்துமஸ் அலங்காரக் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த விழாக் காலத்தில் நமது வீடுகளை அட்டகாசமாக அலங்காிக்கலாம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..................
Image Courtesy: Pinterest



Click it and Unblock the Notifications