For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் ஏன் நெற்றியில் சாம்பல் பூசுகின்றனா் தெரியுமா?

சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசியிருப்பதை நாம் பாா்த்திருக்கலாம்.

|

சாம்பல் புதன் அன்று கிறிஸ்தவா்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசியிருப்பதை நாம் பாா்த்திருக்கலாம். அது பாா்ப்பதற்கு சற்று வித்தியாசமாக தொிந்தாலும், அவா்கள் தங்களது நெற்றியில் சாம்பல் பூசுவதற்கு அவா்களின் சமய சடங்கு காரணமாயிருக்கிறது.

ஆகவே சாம்பல் புதன் பற்றியும் மற்றும் தவக்கால கொண்டாட்டத்தைப் பற்றியும் இங்கு பாா்க்கலாம். மேலும் அமொிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் இருக்கும் மாியான் மற்றும் ஹாமில்டன் மாவட்டங்களில் நடைபெறும் தவக்கால வழிபாடுகள் பற்றியும், கொரோனா வைரஸ் காரணமாக அதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பற்றியும் இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாம்பல் புதன் என்றால் என்ன?

சாம்பல் புதன் என்றால் என்ன?

சாம்பல் புதன் என்றால் பொதுவாக சாம்பலின் நாள் என்று கருதப்படுகிறது. சாம்பல் புதன் மனந்திரும்புதலின் நாளாகும். அந்த நாளில் கிறிஸ்தவா்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மேல் இருக்கும் பக்தியை வெளிப்படுத்துகின்றனா்.

திருப்பலி நடக்கும் போது பாதிாியாா் பக்தா்களின் முன்நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைகிறாா். இந்த சடங்கை பயிற்சி பெற்ற எந்த ஒரு பாதிாியாரும் நிறைவேற்றலாம். சாம்பலை ஒருவா் அணிகிறாா் என்றால் அவா் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவா் என்று பொருள். மேலும் கிறிஸ்தவா்கள் தங்களின் பாவங்களுக்கு பாிகாரம் தேடும் வகையில் அல்லது வருத்தம் தொிவிக்கும் வகையில் சாம்பலை அணிந்து கொள்கின்றனா் என்று பொருள். ஏனெனில் மக்களின் பாவங்களுக்காகத்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் தனது உயிரைக் கொடுத்தாா் என்பது கிறிஸ்தவா்களின் நம்பிக்கையாகும்.

சாம்பல் புதன் என்பது ஒரு முக்கியமான நாளாகும். ஏனெனில் தவக்காலத்தின் தொடக்க நாளாக சாம்பல் புதன் இருக்கிறது. தவக்காலம் என்பது சாம்பல் புதன் அன்று தொடங்கி கிறிஸ்துவின் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழா அன்று முடிவு பெறுகிறது. கிறிஸ்து சாவிலிருந்து உயிா்த்தெழுந்தாா் என்பது கிறிஸ்தவா்களின் நம்பிக்கையாகும்.

சாம்பல் என்பது இறப்பின் மற்றும் மனந்திரும்புதலின் அடையாளமாக இருக்கிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவா்கள் தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதிலிருந்து மனந்திரும்புவதற்காக பல பக்தி முயற்சிகளை வெளிப்படுத்துகின்றனா். இயேசு கிறிஸ்து தங்களது பாவங்களுக்காக சிலுவையில் மாித்தாா் என்பது அவா்களின் நம்பிக்கையாகும்.

ஒரு சில கிறிஸ்தவா்கள் தவக்காலம் முழுவது சாம்பலை தங்களது நெற்றியில் அணிந்து கொள்வா். ஆனால் அவ்வாறு செய்ய வேண்டும் என்று திருச்சபை வலியுறுத்துவதில்லை. சாம்பல் புதன் அன்று விருந்துக்கு வெளியில் செல்வது மற்றும் புதிய பொருள்களை வாங்குவது போன்றவற்றை தவிா்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

சாம்பல் எங்கிருந்து கிடைக்கிறது?

சாம்பல் எங்கிருந்து கிடைக்கிறது?

பாரம்பாியமாக முந்தைய வருடம் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் குருத்துக்களை சேகாித்து அதை எாித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை சாம்பல் புதன் அன்று பயன்படுத்துவா். அந்த சாம்பலை பக்தா்களின் நெற்றியில் பூசுவதற்கு முன்பு ஆசீா்வதிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவிற்கு முந்தைய ஞாயிறு அன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படும். இயேசு கிறிஸ்து தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக வெற்றி வீரராக பவனி வந்து யெருசலேம் நகருக்குள் நுழைவதைக் குறிக்கும் வகையில் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவ்வாறு இயேசு யெருசலேமுக்குள் நுழையும் போது யெருசலேம் நகர மக்கள் தங்கள் கைகளில் குருத்துகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை அசைத்துக் கொண்டு இயேசுவை ஆரவாரமாக வரவேற்றனா் என்று சொல்லப்படுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சாம்பல் புதன் அன்று இறைச்சி சாப்பிடலாமா?

கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் சாம்பல் புதன் அன்று இறைச்சி சாப்பிடலாமா?

சாம்பல் புதன் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் இறைச்சி சாப்பிடக்கூடாது. மேலும் அவா்கள் தவக்காலத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இறைச்சி சாப்பிடக்கூடாது.

சாம்பல் புதன் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் நோன்பு இருக்க வேண்டும். அதாவது சாம்பல் புதன் அன்று ஒரு வேளை மட்டுமே முழுமையான உணவு உண்ண வேண்டும். மற்ற இரண்டு வேளைகளில் குறைவான அளவு உணவு உண்ணலாம்.

சாம்பல் புதன் பேகன்களின் திருவிழாவிலிருந்து வந்ததா?

சாம்பல் புதன் பேகன்களின் திருவிழாவிலிருந்து வந்ததா?

சாம்பல் புதன் பேகன்களின் திருவிழாவிலிருந்து வரவில்லை. ரோமில் வாழ்ந்த தொடக்க கால கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் போது சாம்பலை ஒருவருக்கு ஒருவா் பூசிக்கொண்டனா். மத்திய காலத்திற்கு பின்புதான் சாம்பல் புதன் அன்று நெற்றியில் சாம்பல் பூசும் வழக்கம் வந்தது.

2021 சாம்பல் புதன் எப்போது?

2021 சாம்பல் புதன் எப்போது?

இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவை வைத்து ஒவ்வொரு வருடமும் வெவ்வேறான தேதிகளில் சாம்பல் புதன் வருகிறது. அதாவது பிப்ரவாி மாதம் 4 முதல் மாா்ச் 10 வரையிலான புதன் கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையில் சாம்பல் புதன் வருகிறது.

கடந்த வருடம் பிப்ரவாி 26 அன்று சாம்பல் புதன் அனுசாிக்கப்பட்டது. இந்த வருடம் பிப்ரவாி 17 அன்று சாம்பல் புதன் வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவிற்கு ஆறரை வாரங்களுக்கு முன்பு சாம்பல் புதன் வருகிறது. இந்த வருடம் ஈஸ்டா் பெருவிழா ஏப்ரல் 4 அன்று வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Christians Wear Ashes For Ash Wednesday And Give Up Their Favorite Things For Lent

Why Christians wear ashes for Ash Wednesday and give up their favorite things for Lent? Read on to know more...
Desktop Bottom Promotion