For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விக்டோரியா சீக்ரெட் விளம்பரத்துக்கு முதல் திருநங்கை மாடல்... பார்த்தா அப்படியா தெரியுதா?

|

பெண்களுக்கான அழகு சாதனங்கள், ஆடைகள் இவற்றை வடிவமைக்கும் பிரபல அமெரிக்க நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரெட். இதன் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி எட் ராஸேக், 'வோக்' என்ற பத்திரிகைக்கு கடந்த ஆண்டு பேட்டி அளித்தார்.

அதில் தங்கள் நிறுவனத்தின் 'ஷோ' எனப்படும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகள், ஆடை அலங்காரம் மற்றும் புதிய பாணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவை என்பதால் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று தெரிவித்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டன கணைகள்

கண்டன கணைகள்

இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில், பெரிய உடல்வாகு கொண்டவர்களுக்கான தாங்கள் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை; தற்போது வரைக்கும் யாரும் அதில் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலை தம் கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக கூறியிருந்தார். ஆனால், எட் ராஸேக்கின் கருத்துக்கு பெருமளவில் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தன. தொடர்ந்த கண்டனத்தால் அவர் தம் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

யாரந்த திருநங்கை?

யாரந்த திருநங்கை?

விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், "மூன்றாம் பாலினத்தவர் ஒருவரை மாடலாக பயன்படுத்துவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் பதிவிடும் அளவுக்கு கண்டனம் வலுத்தது. அப்படி அறிவித்து ஓராண்டு கழித்து, விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம், தங்கள் மூன்றாம் பாலின முதல் மாடலாக வாலண்டினா ஷாம்பையோவை பெருமிதத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

இருபத்திரண்டு வயதான வாலண்டினா ஷாம்பையோ பிரசிலை சேர்ந்த மாடல் அழகியும் நடிகையுமாவார். பல்வேறு பத்திரிகைகளின் அட்டைகளை இவரது புகைப்படம் அலங்கரித்துள்ளது. விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான விஎஸ் பிங்க், தங்கள் கேட்லாக் என்னும் ஆடை விவர புத்தக வேலைக்காக வாலண்டினா ஷாம்பையோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

அட்டகாசமான படங்கள்

அட்டகாசமான படங்கள்

இதற்கென எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாலண்டினா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அட்டகாசமான படங்கள் இதில் வெளியாகியுள்ளன.

சூரியன் மறைவதை பின்பக்கம் காட்சிப்படுத்தி, வெள்ளை நிற கூஷெட் வகை ஆடையில், காதுகளில் பெரிய வளையங்களை அணிந்தபடி, அவர் சிரிக்கும் புகைப்படம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. தொடர்ந்து சிவப்பு நிற நீச்சலுடை மற்றும் கறுப்பு நிற பிகினி ஆடைகளிலும் அவர் காட்சியளிக்கிறார். ஃஸெபாகேட்டி மற்றும் டெனிம் என எல்லா வகை ஆடைகளிலும் முழுமையடைந்த மாடலாக அவர் விளங்குவதை உணர முடிகிறது.

MOST READ: எப்பவும் அடிபட்டு முன்னேறுற ரெண்டு ராசிக்காங்க யார் தெரியுமா? இவங்கதான்...

காத்திருக்கும் கண்கள்

காத்திருக்கும் கண்கள்

விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் ஷோவில் உண்மையாக மண்ணில் இறங்கிய தேவதையாக அவர் மிடுக்காக நடந்து வருவதை காண கண்கள் காத்திருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stylish & Stunning, Valentina Sampaio Is Victoria's Secret's First Transgender Model

Last year, Chief Marketing Officer of Victoria's Secret, Ed Razek told Vogue that he didn't think they should have transsexuals in the show because the show is a fantasy.